நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவதால் மீடியாக்கள் மூலம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கிளப்பப்படு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி  யான தந்தி டிவிக்கு  அவர் அளித்த பேட்டியில் , “நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக் கூடாது என்பதால் அதை சுட்டிக் காட்டுகிறேன்.னது கருத்து அரசியல் தொடர்பானது, அதிமுக பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும் என்றார். மேலும்  அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:-  கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:-…
Read More
ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

  கடந்த வாரம் சென்னை  அலங்காநல்லூரில் பில்லா பாண்டி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அப்படத்தில் பணியாற்றும்  ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் இப்பட தயாரிப்பா ளர்களுக்கும் இடையே டிராவல் பேட்டா தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் செல்ல, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெப்சி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை  ஃஃபெப்சி அமைப்பினர் வைக்க, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது , ‘ஒரு படப்பிடிப்பை நிறுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது.  ஃபெப்சி தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான், பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து  வாழ முடியும். சம்பள விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் ஒரு…
Read More
விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்​ ​“மதுரவீரன்” ஃப்ர்ஸ்ட் லுக்!

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்​ ​“மதுரவீரன்” ஃப்ர்ஸ்ட் லுக்!

V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார், அவருடன் ​​பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அவர் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம், இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில்,சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ’வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக் ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர், P.G.முத்தையா.…
Read More
‘மீசைய முறுக்(கு)’கிய நடிகருக்கு தெலுங்கிலும் சான்ஸ் கிடைச்சிடுச்சு!

‘மீசைய முறுக்(கு)’கிய நடிகருக்கு தெலுங்கிலும் சான்ஸ் கிடைச்சிடுச்சு!

மீசைய முறுக்கு ’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன். பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்கு பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக்கொண்டேன். இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தேன். ஒரு அறிமுக நடிகர் என்றில்லாமல் ரசிகர்கள் நான் வரும் காட்சிகளில் கைத்தட்டி விசில் அடித்த…
Read More
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

படு கேஷூவலாக பல்வேறு ரோக்லளில் நடிக்க ஆரம்பித்து தர்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று கடந்த ஆண்டு 6 படங்களை வெளியிட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மார்ச் மாதம் வெளியான 'கவண்' ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாதாவாக அவர் நடித்த 'விக்ரம் வேதா' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும் தற்போது கருப்பன், அநீதி கதைகள், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், புரியாத புதிர் ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,…
Read More
பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் ரா..ரா.. ராஜசேகர்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யார் ? இவர்கள்' என பெயரிட்டுள்ளார்கள். லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க 'ரா.. ரா.. ராஜசேகர்' படத்தை இயக்கினார் பாலாஜி சக்திவேல். அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார். 'யார்? இவர்கள்' என பெயரிடப்பட்டுள்ள படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, பாண்டியன்,…
Read More
விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. காரணம், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார். மிக முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றவுள்ளாராம். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. இந்த…
Read More
சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் – ரிலீஸ் எப்போ?

சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் – ரிலீஸ் எப்போ?

சின்னத் திரையில் லொள்ளு பண்ணிக் கொண்டிருந்த  நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் காமெடிய னாகி அடுத்த  ஹீரோவாகவு அறிமுகமாகி  சக்சஸ் படங்களை தந்தவர். கடந்த வருடம் வெளியான இவரது திகிலும், நகைச்சுவையும் கலந்த `தில்லுக்கு துட்டு' திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க புதுமுக இயக்குநர் ஆனந்த பால்கி “சர்வர் சுந்தரம்” என்ற புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் சந்தானம் சமையல்காரர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். வைபவி ஷண்டில்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். காதல், போட்டி, நகைச்சுவையுடன் சேர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் சர்வர் சுந்தரம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனச் சென்ற மாதம் வந்த டிரெய்லரைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் சர்வர் சுந்தரம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டு `U' சான்றிதழ் பெற்றிருக்கிறது என்று இயக்குநர் ஆனந்த பால்கி அறிவித்திருக்கிறார். எனவே சர்வர்…
Read More
’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! –  அக்‌ஷராஹாசன் விளக்கம்!

’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! – அக்‌ஷராஹாசன் விளக்கம்!

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக அவர் அளித்த பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு, "கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன்” என்றார்.  மேலும் அவர், “என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்விய லோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்'' என்றார். இதையடுத்து அக்‌ஷரா ஹாசன் பெளத்த மதத்தை தழுவி விட்டார் என்று செய்திகள் பரவின. உடனே கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹாய் அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? நீ மாறியிருந்தா லும் எனக்கு உன்னைப் பிடிக்கும். அன்பு மதம்…
Read More