பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

0
254

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் ரா..ரா.. ராஜசேகர்’ படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘யார் ? இவர்கள்’ என பெயரிட்டுள்ளார்கள்.

லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க ‘ரா.. ரா.. ராஜசேகர்’ படத்தை இயக்கினார் பாலாஜி சக்திவேல். அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார். ‘யார்? இவர்கள்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, பாண்டியன், ராம், விஜயன், அபிராமி, பத்ரி, குரு ரமேஷ், சுவைதர், முத்து, சுரேஷ், கஜபதி, குமரப்பா மற்றும் வினோதினி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார் பாலாஜி சக்திவேல். ஜாவத் ரியாஸ் இசையமைக்கவுள்ள இதற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.