வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வசூல் வேட்டை செய்ய தவறுவதில்லை. இதனால் விநிநோகிஸ்தர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ரெமோவின் மாபெரும் வெற்றியால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கான மார்க்கெட் பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் படங்களை வாங்க பெரிய நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக வேலைகாரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது என்று தயாரிப்பு நிறுவனமான ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் யூரோப் மற்றும் யூகே வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தியை ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.…
Read More
நான் எந்தப் படத்திலும் நடிக்கலை! – சிம்பு விளக்கம்

நான் எந்தப் படத்திலும் நடிக்கலை! – சிம்பு விளக்கம்

சிம்பு நடிப்பில் வெளியான ' அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பில்லா- 3 என்ற பெயரில் ஒரு படத்தில் நடிகர் சிம்பு தயாரித்து ,இயக்கி, நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஆனால், இது ரஜினி ,அஜித்தின் பில்லா மறுதொடக்க தொடர்ச்சியாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சிம்புவின் கெட்டவன் படத்தை பில்லா- 3 ஆக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கொடுரமான பாத்திரத்தில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களை உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொரு முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை தேடிவருவதாக கூறப்படு கிறது. ஆரம்பம் படத்தில் நடித்த அக்‌ஷரா கவுடா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் எடுக்கபட்டு…
Read More
அஜித் சாருடன் பணி புரிந்தது அருமை! – அக்‌ஷராஹாசன் மகிழ்ச்சி!

அஜித் சாருடன் பணி புரிந்தது அருமை! – அக்‌ஷராஹாசன் மகிழ்ச்சி!

லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த…
Read More
நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷய மாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் "நிபுணன்". இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ' இந்த ‘நிபுணன்' பட குறித்து பிரசன்னா பேசுகையில், ''இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்திய நாதன் எனது நீண்ட நாள் நண்பர். ஆரம்பத்தில் இதில் நடிக்க தயங்கினேன் . பின்னர் கமிட் ஆகி நடித்து முடித்து இப்போப் பார்த்தால்  'நிபுணன்' ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. இதை நீங்களே படம் பார்க்கும்…
Read More
வயோதிகம் என்பது பிழையில்லை! – முக்தா சீனிவாசன்

வயோதிகம் என்பது பிழையில்லை! – முக்தா சீனிவாசன்

முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாக திகழ்ந்த கால கட்டத்தில் கோலோச்சிய பெயர்கள்..தரமான படங்களை தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள். இவர்களின் ஒவ்வொரு படைப்புமே இன்று வரை நினைவில் நிற்பவை..சினிமாத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தாலும் முக்தா சீனிவாசன் எழுத்து துறையை ஒதுக்கிவிடவில்லை. இது வரை 250 புத்தகங்கள எழுதி இருக்கிறார். சுமார் 1000 சிறுகதைகள் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். "திரைத்துறைக்குள் காலடி வைத்து 70 ஆண்டுகளை கடந்து விட்டேன். 50 படங்களுக்கு மேல் இயக்கி தயாரித்து விட்டேன். அதில் கிடைத்த அதே அளவு மன நிறைவை எழுத்தின் மூலம் பெற்றிருக்கிறேன்.. நாம் கற்றதை மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் அதுவும் இலவசமாக. திருப்பி தந்து விட வேண்டும்…
Read More
விவாத மேடையாக மாறிய சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா!

விவாத மேடையாக மாறிய சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா!

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர்…
Read More
ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.அதில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்…
Read More
‘தரமணி’  படத்துக்கு A  சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

‘தரமணி’ படத்துக்கு A சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர். ஆம். ’கற்றது தமிழ்’ ராம் படைத்துள்ள  தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம். இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார். ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்றுதான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது.. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க," என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது தரமணி. ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது…
Read More
விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரமாதித்தன் வேதாளம் இதிகாசத்தை அட்டகாசமாக போலிஸ், ரௌடி கதையாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புதுமை தான் படத்தின் மிகப்பெரும்பலம். ஓரம்போ , குவாட்டர் கட்டிங் என்ற இரு படங்களுக்குப் பிறகு 7 வருட உழைப்பில் வந்திருக்கும் புஷ்கர் காய்த்திரியின் படம் விக்ரம் வேதா. படத்தின் ஒரு ஃபிரேம் கூட வீணாக்காமல் அத்தனை அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் பாதி வெற்றி அந்தப்படத்தின் நடிகர்கள் தேர்வில் இருக்கிறது. மாதவன், விஜய் சேதுபதி மட்டுமல்லாது படத்தில் வரும் ஒவ்வொரு சிறு கதாப்பாத்திரமும் அழகாக தேர்ந்தெடுத்து கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு சரியென்பதை துணிச்சலாக செய்யும் போலீஸ் அதிகாரி ஒரு ரௌடியை என்கவுண்டர் பண்ண அலைகிறார்கள். ரௌடி கூட்டதின் ஒரு என்கவுண்டருக்குப் பின் தானே போலிஸைத் தேடி வரும் ரௌடி பொலீஸ் மாதவனிடம் விளையாடும் வேதாள விளையாட்டுத்தான் விக்ரம் வேதா. சமீப காலத்தில் இத்தனை தெளிவாக, இவ்வளவு துல்லிய விவரங்களுடன் வந்திருக்கும் திரைக்கதை இது தான். விஜய் சேதுபதி சொல்லும்…
Read More