விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்​ ​“மதுரவீரன்” ஃப்ர்ஸ்ட் லுக்!

V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார், அவருடன் ​​பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அவர் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம், இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில்,சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ’வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக் ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர், P.G.முத்தையா. இவர், பூ, கண்டேன் காதலை, சகுனி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சண்டிவீரன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார், பாடல்கள் யுகபாரதி, எடிட்டிங் K.L.பிரவீன், கலை விதேஷ், சண்டைபயிற்சி ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி, விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து ​ படப்​பிடிப்பு நடைபெற்று நிறைவடையும். ​