மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு அந்த உயரத்தை அடைய அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்ததில் இந்த இசையமைப்பாளருக்கும் பெரிய பங்குண்டு. ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் பாடல், `அட' போட வைக்கும் பின்னணி இசை, தேன் சொட்டும் காதல் பாடல்கள், கண்ணீர் கொட்டும் சென்டிமென்ட் பாடல்கள் என முழுமையான பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆம்.. ரஜினிக்கு சந்திரமுகி ,கமலுக்கு அன்பே சிவம் , அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் ,விக்ரமுக்கு தூள்,தில் ,மாதவனுக்கு ரன், விஜய்-க்கு கில்லி, தனுஷூக்கு சுள்ளான் என அவர்களின் கேரியரில் பெஸ்ட் என்று சொல்லப்படும் ஆல்பத்தைக் கொடுத்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர்! 90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் கட்டாயம் கால் பங்கு இடத்தை வித்யாசாகரின் பாடல்கள் நிரப்பி யிருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. ஆனால் `வா வா என் தேவதையே', `ஆராரோ ஆரிரரோ' என 2K கிட்ஸ்களைத்…
Read More
யுவனின் கோலிவுட் எண்ட்ரி-க்கு இன்னிக்கு வயசு 25

யுவனின் கோலிவுட் எண்ட்ரி-க்கு இன்னிக்கு வயசு 25

புல்லாங்குழல் மீதமர்ந்து நாட்டியமாடும் விரல்களுக்கு சொந்தக்காரன்; விட்டேத்தி மனநிலையை ஆற்றுபடுத்துவோன்; வெறுமை வாழ்வின் சுடரொளி; இசைவழியே இளைப்பாற்றும் ஞானக்குழலோன்; கானங்களின் காதலன்; கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்; தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி... 'யுவனிசம்' போற்றுவோரால் இவ்வாறெல்லாம் ஆராதிக்கப்படும் தமிழ்த் திரையிசை உலகின் தனிக்காட்டு ராஜாவான யுவனின் கோலிவுட் எண்ட்ரி-க்கு இன்னிக்கு வயசு 25 ஆம் 1997 ஆம் வருசம் இதே பிப்ரவரி 27ல் இசையமைப்பாளராக அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 படங்களை கடந்து 23 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி காணாமல் போனாலும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு. யுவன் தனது ஆரம்ப நாட்களை வலிகளுடனே எதிர்கொண்டார். அம்மாவின் விருப்பத்தின் பேரில் 1997-ஆம் ஆண்டு 'அரவிந்தன்'…
Read More
ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை &  திரைக்கதை!

ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை & திரைக்கதை!

ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம். அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை. ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது! ஆம்.. 1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் "தில்லுமுல்லு'' படம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார். லதா தமிழிலும்,…
Read More
கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

‘ஆமா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் வீரன் குறிச்சு நம்ம  கட்டிங் கண்ணையா சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிறக்காக தயார் செய்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ” நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைஞ்சுது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் வெளியான தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப்…
Read More
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவ கார்த்திகேயன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவ கார்த்திகேயன்!

காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தவர் இன்று தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என கோலிவுட்டில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்திருக்கும் ஆர்டிஸ்ட் சிவகார்த்திகேயன் .. முன்பொரு முறை சொன்னது போல் சிங்கர், காமெடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட சிவ கார்த்திகேயனுக்கு. டைமிங் காமெடி, உடனிருக்கும் தொகுப்பாளரைக் கலாய்த்து அரங்கை சிரிக்க வைப்பது, 'ஆன் தி ஸ்பார்ட்' காமெடியில் கலக்குவது அப்படீன்னு லைஃப் ஸ்டைல் போய் கொண்டிருந்தவருக்கு 'மெரினா'வின் வழியே வெள்ளி திரைக்குள் நுழைய ஒரு வாய்ப்ப்ய்க் கிடைத்தது . அப்போதிலிருந்து 'உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு ஓடு ஓடிக் கொண்டே இரு, வெற்றி வரும்' என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டேருக்கும் இந்த இளைஞரின் ஓட்டத்தின் குறுக்கே ஆயிரம் தடைகள், அவமானங்கள், ஏமாற்றங்கள். என பல வலிகளை எல்லாம் தாங்கி தற்போது ‘கோலிவுட்டின் டான் ' என்று…
Read More
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எழுத்தாளர்களில் பலரும், திரைப்பட இயக்குநர்களில் பலரும் தங்கள் சிறுவயதிலும், இளமைப் பருவத்திலும் விருப்பக் கனவாய் கொண்டிருந்தவைகளையே பிற்காலத்தில் படைப்பாக்குகிறார்கள்.‘ஸ்பீல் பெர்க் ‘கும் அப்படித்தான். ஆனால், அவருடைய கனவு கள் வித்தியாசமானவை, மிகப் பெரியவை. ஸ்பீல் பெர்க் சக்திமிக்க இயக்குநராகி பெருமளவில் செல்வத்தைக் குவிப்பதற்குக் காரணமாயிருந்தது அவருடைய நுண்ணறிவேயாகும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1947-ல் இதே டிசம்பர் 18-ஆம் நாள் பிறந்தார். பிறந்த இடம் ஸின் ஸினாட்டி (அமெரிக்க ஓஹியோ மாநிலம்). சின்ன வயதிலேயே விசித்திரமான பொருட்களின் மீதும், அதிசயமான விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அவர். வானத்தில் இருந்து எரிகற்கள் மழையாய் விழு வதைப் பார்க்க அதிகாலை 3 மணிக்குத் தனது தந்தை யோடு மலைப்பக்கம் சென்றிருக்கிறார். அவருடைய தந்தை ஓர் எலக்ட்ரிகல் என்ஜினீயர். அமெரிக்கா அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கியிருந்தது. அவர் தனது தொழிலை முன்னிட்டு குடும்பத்தோடு ஊர் ஊராய் மாறியபடி இருந்தார். தந்தையின் நேர உணர்வு, எதையும் நேர்த்தியாகச் செய்யும் தன்மை…
Read More
வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல். படத்தில் பாடும் கே.ஆர்விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்சநஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும் . காவல் தலைவன் ஞானத்தமிழன் எந்தன் துணைவன் இன்பக்குமரன்.. என்ற வரிகளை வாணி பாடும்போது, அதிலும் இரண்டாவது முறை இந்த வரிகளை இழுக்கும்போது என்ன கெமிஸ்ட்ரியோ?. 1974லிருந்து பாடல் உருகவைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நடை உடை பாவனை அனைத்திலும கே.ஆர் விஜயா மாதிரியே இந்த பள்ளிக்கூட டீச்சரின் தாக்கமா? இல்லை தோழிக்கும் இந்த சேம் வாய்ஸ் இருந்ததால் குடைந்து கொண்டே வந்த தாக்கமா? என்ன இம்சையோ போடா வெங்கடேசா... அடுத்து எங்கம்மா சபதம். அன்பு மேகமே இங்கு ஓடி வா பாடல்.. மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் விவித பாரதியில் கேட்கும்போதெல்லாம். மனசு காற்றில் பறக்கும். சரி வாணி…
Read More
error: Content is protected !!