கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட்டில் ஒரு டைரக்டராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன... இன்றைய ஒரே நாளில் ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது.. செயலில் ஒழுக்‍கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்‍கப்படும் கே.பாலசந்தர். நாடகங்கள் நடத்திக்‍கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக்‍ கொண்டிருந்த பாலசந்தருக்‍கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்‍கு அறிமுகப் படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த 'தெய்வத்தாய்' என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார். எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத்…
Read More
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

நாளைய முதல்வராக ஆசைப்படும் நடிகரின் அப்பா & டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் 82ஆவது பிறந்தநாள் இன்று 💐 ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஏபி நாகரஜன்,பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த டைரக்டர்கள் வரை எத்தனை எத்தனையோ விதங்களில் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது இந்தியாவில் ஹாட் டாபிக் ஆகி இருக்கும் சட்டப் பிரச்சினைகளை அலசி, கூறுப் போட்டு நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்து வாயை பிளக்க வைத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர். கோலிவுட் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான்…
Read More
ஜூனியர் இளையராஜா கார்த்தி ராஜா பர்த் டே!

ஜூனியர் இளையராஜா கார்த்தி ராஜா பர்த் டே!

எப்பேர்பட்ட பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி. ஆனால் திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 51வது பிறந்தநாளாகும். கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.நாம் தினசரி கேட்டும் பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்தார் என ஒருவரை நினைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் தான் அந்த பாட்டுக்கு சொந்தக்காரர் என்னும் போது அவரின் பாடல்களை தேடிச் செல்வோம். அப்படி…
Read More
தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'ஈநாடு' நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள். ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள்…
Read More
பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப் பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி... வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகி விடுவார்கள்.…
Read More
நக்கல் மகாராஜா கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

நக்கல் மகாராஜா கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

கவுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்💐 உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் பகுதியில் பிறந்தவரின் நிஜப் பெயர் சுப்ரமணி. திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்ட மணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் கவுண்டமணியாக அறிமுகம்…
Read More
அஜித்-ஷாலினி திருமண நாள்!👨‍❤️‍💋‍👨

அஜித்-ஷாலினி திருமண நாள்!👨‍❤️‍💋‍👨

தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடியான அஜித்- ஷாலினி தங்களது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். இவங்க லவ் & மேரேஜ் குறித்து கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்சிருக்கும் சேதிகள் கீழே: 1999- ஆம் வருஷம் இருவரும் நடிச்ச அமர்க்களம் படம்தான் இவிய்ங்க காதலுக்கான விசிட்டிங் கார்டு. கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. சைல்ட் ஆர்டிஸ்டாவே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கப் படங்களில் நடிச்சிருக்கார். ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ விஜய்யின் காதலுக்கு மரியாதை. இதுதான் தமிழிலும் ஷாலினிக்கு முதல் படம். இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைஞ்சு நடிச்சார். முன்னரே சொன்னது போல் அதுதான் அமர்க்களம். அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை ஆரம்பமானதும் அந்த படத்தில்தான்.டைரக்டர் சரண் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் அப்போ மறுப்பு தெரிவிச்சுப்புட்டார். அதன் பிறகு அஜித் நேரடியாக பேசவே அவரது…
Read More
பன்முகக் கலைஞன்  இன்னா .. செல்லம்.,. பிரகாஷ்ராஜூக்கு ஹேப்பி பர்த் டே💐

பன்முகக் கலைஞன் இன்னா .. செல்லம்.,. பிரகாஷ்ராஜூக்கு ஹேப்பி பர்த் டே💐

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரகாஷ்ராஜ் இன்று (மார்ச் 24) தன்னுடைய 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கர்நாடகாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கன்னடத்தில் சிறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவருக்கு சரியான தொடக்கமாக அமைந்தது கே.பாலச் சந்தரின் டூயட். அதில் இவர் நடிப்பு முதல் முறையாக தமிழ் மக்களால் கவனிக்கப் பட்டது. இதற்கு பிறகு பிரகாஷ் ராஜை மேலும் பிரபலமாக்கியது .மணி ரத்னத்தின் இருவர். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் காட்டிய நடிப்பு அவ்வளவு சாதரணமானதல்ல. அதுவும் தனது ஆரம்பக்கால நடிப்பில் இருக்கும் ஒரு நடிகனுக்கு, மிகப்பெரிய பேச்சாளரான ஒரு அரசியல் வாதியின் கதாபாத்திரம் என்பது எத்தனை…
Read More
பழம் பெரும் கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்!

பழம் பெரும் கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்!

இசை உலகின் முடிசூடா மன்னனாகப் போற்றப்பட்ட பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ் (72) காலமானார். இது இசைப் பிரியர்களையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டில் காலத்தால் அழியாத பல கிளாசிக் ஹிட் பாடல்கலைக் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் . ஜமீன்தார் குடும்பத்தில், கடந்த 1951 மே 17 அன்று குஜராத் மாநிலம் ஜெட்பூரில் பிறந்தார். இவரது குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் இவர்தான் இளையவர். இவருடைய குடும்பம் ராஜ்கோட் அருகே உள்ள சர்க்காடி என்ற ஊரைச் சேர்ந்தது. அவரது தாத்தாவும் பாவ்நகர் மாநிலத்தின் ஜமீன்தார் மற்றும் திவானாக இருந்தார். அவரது தந்தை கேசுபாய் உதாஸ் ஒரு அரசு ஊழியர் மற்றும் இவரது தாயார் ஜிதுபென் உதாஸ் பாடல்களை மிகவும் விரும்பி பாடுவார். பங்கஜ் உதாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இசையில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து…
Read More
இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

பி. கே. ராஜா சாண்டோ ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். அக்காலத்தில் திரைப்பட தயாரிப்பு களுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு. மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை…
Read More