07
Dec
இப்பத்திய குத்துபாட்டு போன்ற துள்ளல் பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் பேர்போனவர் பழம் பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. 'நல்ல இடத்து சம்மதம்' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், 1961ஆம் ஆண்டில் வெளியான 'பாச மலர்' படத்தில் பாடிய "வாரயென் தோழி.." என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். துள்ளல் பாடலுக்கு பேர் போனவராக இருந்தாலும், காதோடுதான் நான் பேசுவேன் என்ற மெல்லிசை பாடல்களையும் பாடி அசத்திய இவர் பாடிய மற்றொரு பாடலான "பட்டத்து ராணி.." என்ற பாடலை இந்தியில் பாடகி லத்தா மங்கேஸ்கர், "பாட கடினமாக இருக்கிறது இதை அவர் பாடியது போல என்னால் பாட முடியாது" என்று கூறினாராம். "முத்துக்குளிக்க வாரீகளா...", "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை...", "ஆடவரரெல்லாம் ஆட வரலாம்...", "மலரென்ற முகம் என்று.." உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும், என்றும் இசைப் பிரியர்களின் மனதில் என்றென்றும் நிற்கும். அத்தகைய அற்புத இசையினை அளித்த எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ், தெலுங்கு,…
