நிஜ சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத / மறக்கக் கூடாத நடிகை சில் ஸ்மிதா!

0
268

1926 ஜூன் மாசம் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாஸ்பிட்டலில் பிறந்த குழந்தையோட பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , அரம்பத்தில் இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று யாருக்கும் தெரியவில்லை, சின்ன வயதில் பல்வேறு துன்பங் களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கிக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மர்லின் மன்றோ… இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது…

1960 , அந்த மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத் தில் விஜயலட்சுமி என்ற பெயரில் இதே டிசம்பர் 2 ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு. சின்ன வயசில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைச்சுட்டாய்ங்க, ஹஸ்பன்ட் & மாமியார் கொடுமை யால், அங்கிருந்து தப்பிச்சு மெட்ராசுக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. , தமிழகத்தை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.

ஆனாலும் இவரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும், கவர்ச்சியான நடிப்பிற்கும் முகம் சுழித்தவர் களும் இருந்தனர், யாரும் எளிதாக செய்ய தயங்கும் கவர்ச்சி வேடங்களை சில்க் அநாயசமாகச் செய்தார் என்பதால் பல பேர் அவரை வெக்கம் இல்லாதவள் , மானம் கேட்டவள் என்றும் பட்டம் அளித்தனர், ஆனால் அதை சில்க் அதை சட்டை செஞ்சதில்லை. ஐடம் கேர்ள் நடனம் மட்டும் ஆடும் பெண்களிடையே சில்க் தான் என்றும் டாப், அதோடு மட்டும் அல்லாமல் சில்க் பல படங்களில் நடித்தும் உள்ளார், அற்புதமான நடிகையும் கூட அவர்…

அந்த சுமித்தாவின் வாழ்க்கை புரியாத புதிராகவே இருந்து வந்தது, அவரின் தனிப் பட்ட வாழ்க்கை இன்று வரை மர்ம முடிச்சுகள் அவிழப் படாமல் இருகின்றது என்பதுதான் உண்மை ,

அவர் தற்கொலை செய்துக் கொண்ட பின், ஏற தாழ அவரைப் பற்றி தமிழ் மக்களும் சினிமா துறையும் மறந்து போய் விட்டது என்றுதான் சொல்லோனும்,

ஆனாலும் தீடிரென பாலிவுட்டில் அப்பாலே கோலிவுட்டிலும் அவரின் சுய சரிதை படமாக்கப்படுவதாக சில தகவல் வந்து மறைவது போய் விடும்

ஆனாலும், நிஜ சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத / மறக்கக் கூடாத நடிகை இவர்

தகவல் : கட்டிங் கண்ணையா