11
Feb
மிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்.. கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் …..அதிலும் தன் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். தெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை… அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல். மேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு. இவரின் முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். அப்பா ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா. அப்பா இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி,…
