ரஜினி & கமல் தொடங்கி வைத்த எம் ஜி ஆர். சினிமா!

ரஜினி & கமல் தொடங்கி வைத்த எம் ஜி ஆர். சினிமா!

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற அனிமேஷன் திரைப்படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமலஹாசனும் தொடங்கி வைத்தனர். முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆர் நடித்து, இயக்கி, தயாரித்து அபார வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற பெயரில் தொடரும் என்று அறிவித்து நிறைவுறும். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ், அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளான புதனன்று, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படம் குறித்த அறிமுக வீடியோவை நடிகர் கமலஹாசன், வெளியிட்டார். விழாவில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ நடிகைகள் லதா, சௌகார் ஜானகி, சச்சு, குட்டி பத்மினி, அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர்.…
Read More
எம்.ஜி.ஆர். அனிமேசனில் ‘நடிக்கும்’ ‘ கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’-வுக்கு பூஜை!

எம்.ஜி.ஆர். அனிமேசனில் ‘நடிக்கும்’ ‘ கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’-வுக்கு பூஜை!

எம்.ஜி.ஆர். நடித்து 1973_ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்", பல சாதனைகளைப் படைத்தது. திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்". ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி ("எக்ஸ்போ 70") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர். நடித்தார். விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை…
Read More

ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்!

தற்போதும் திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மோகன் ராஜா அதை மறுத்து வந்தார். இதனிடையே பல தெலுங்குப் படங்களைத் தமிழில் ரீமேக் செய்தவர் மோகன் ராஜா. அவர் ரீமேக் செய்த ‘ஜெயம்’ படத்தில்தான், அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதால், இன்றுவரை அவர் ஜெயம் ரவி என்றுதான் அழைக்கப்படுகிறார். அதன்பிறகு ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ போன்ற பல படங்களை இயக்கினார் மோகன் ராஜா. direr மோகன் ராஜாவே சொந்தமாகக் கதை எழுதி, இயக்கிய படம் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதன்பிறகு ‘வேலைக்காரன்’ படத்தின் கதையையும் சொந்தமாக எழுதி, இயக்கினார். சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில்,…
Read More
நகைச்சுவைக் கலந்த காதல் படம் – டீக்கடை பெஞ்ச்’

நகைச்சுவைக் கலந்த காதல் படம் – டீக்கடை பெஞ்ச்’

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “இந்த படத்தில் ராம கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் –  ராம்ஷேவா. இந்த இயக்குனர் ராம் ஷேவாவிடம்  படத்தைப் பற்றி கேட்டோம்.. “இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால்  நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.  இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல்…
Read More
தல – தளபதி ரசிகர்களை மையமாக கொண்டு தயாரான ‘விசிறி’ – பிப்-2ல் ரிலீஸ்!

தல – தளபதி ரசிகர்களை மையமாக கொண்டு தயாரான ‘விசிறி’ – பிப்-2ல் ரிலீஸ்!

தல அஜித், தளபதி விஜய் ரசிகர்களை மையமாக வைத்து வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ள ‘விசிறி’ படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை…
Read More
முதலமைச்சராக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.! – பவர் ஸ்டார் ஹேப்பி 

முதலமைச்சராக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.! – பவர் ஸ்டார் ஹேப்பி 

Jan 10, 2018 ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.  இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.  மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், படத் தொகுப்பு – ராஜ்குமார், பாடல்கள் – யுகபாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் – கானா பாலா, ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், எழுத்து, இயக்கம் – இயக்குநர் ரசாக். இந்தப் படத்தில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும்,…
Read More
கவர்ச்சி நடிகை சில்க் மாதிரி பெண்ணை ஆன்லனில் தேடும் பார்த்திபன்!

கவர்ச்சி நடிகை சில்க் மாதிரி பெண்ணை ஆன்லனில் தேடும் பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே' ஆபாச வசனங்கள் நிறைந்த. கவர்ச்சிப் படம் என்று கடும் கண்டத்தைச் சந்தித்தது. ஆனால் சமீப காலமாக பல முன்னணி ஹீரோக்களின் பாடல்களிலேயே சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தை இடம் பெற்று அதுவும் ஹிட் அடிக்கும் சூழலில் தன் உ.வெ. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரைத் தேடித்தான் மலேசியா சென்றாராம். இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் . “மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், எனது அடுத்த படமான 'உள்ளே வெளியே 2' படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன். சந்திக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்'' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே தற்போது உள்ள சூழ்நிலையில், இணையதளம் சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. ஒரு ஹீரோ…
Read More
சாமி 2′-ம் பாகத்தில் த்ரிஷா நடிக்கிறார்.. ஆனால் இல்லை!

சாமி 2′-ம் பாகத்தில் த்ரிஷா நடிக்கிறார்.. ஆனால் இல்லை!

ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படத்தில் விக்ரம், த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை, டெல்லி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால், 'சாமி 2' படத்திலிருந்து த்ரிஷா திடீரென்று விலகினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "படைப்பாக்கக் கருத்து வேறுபாட்டால், நான் 'சாமி 2' படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன். படக்குழுவுக்கு நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார். அவருடைய விலகலுக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடுக்கப்பட்டது. த்ரிஷா 'சாமி 2' படத்தில் நடிக்காவிட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, த்ரிஷா 'சாமி 2' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறியுள்ளார். 'சாமி 2' படத்தில் இருந்து த்ரிஷா இன்னும் விலகவில்லை என்று…
Read More
துப்பாக்கி முனை  நாயகன் விக்ரம் பிரபு ஜோடி- ஹன்சிகா

துப்பாக்கி முனை நாயகன் விக்ரம் பிரபு ஜோடி- ஹன்சிகா

குலேபகாவலி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் குலேபகாவலி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் ஹன்சிகா. இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். கடந்த சில நாட்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஒளிப்பதிவை ராசாமதி கவனிக்க, எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சீனிவாசன் கவனிக்கிறார். ஹன்சிகா, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம் -‘வஞ்சகர் உலகம்’

கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம் -‘வஞ்சகர் உலகம்’

சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் 'வஞ்சகர் உலகம்'. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். 'வஞ்சகர் உலகம்' குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , '' இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். 'வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர் . குறிப்பாக குரு சோமசுந்தரத்தின்…
Read More