மன்சூர்ரலிகான் மகன் அறிமுகமாகும் ‘ கடமான்பாறை’

மன்சூர்ரலிகான் மகன் அறிமுகமாகும் ‘ கடமான்பாறை’

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.  அத்துடன் இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக   நடிக்கிறார்.                                                                       …
Read More
கும்கி 2 ஹீரோயின் அதிதி மேனன் – ஆகஸ்டில் ஷூட்!

கும்கி 2 ஹீரோயின் அதிதி மேனன் – ஆகஸ்டில் ஷூட்!

கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸானது விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூல் மழை பொழிந்தாக கூறப்பட்டது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனிடையே ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, ‘கும்கி 2’ படத்துக்கான நாயகியின் தேர்வில் கவனம்செலுத்தி வந்தார் இயக்குநர் பிரபு சாலமன். முதலில் நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ஒப்பந்தமாவதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால், அச்செய்தி வதந்தி எனத் தெரிவித்த பிரபு சாலமன் நாயகியைத் தேர்வுசெய்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘கும்கி 2’ படத்துக்குக் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனன், தற்போது அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பல நாயகிகள் தேர்வுக்குப் பிறகு,…
Read More
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

படு கேஷூவலாக பல்வேறு ரோக்லளில் நடிக்க ஆரம்பித்து தர்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று கடந்த ஆண்டு 6 படங்களை வெளியிட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மார்ச் மாதம் வெளியான 'கவண்' ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாதாவாக அவர் நடித்த 'விக்ரம் வேதா' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும் தற்போது கருப்பன், அநீதி கதைகள், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், புரியாத புதிர் ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,…
Read More
மின்வெட்டை மையமாக கொண்டு  தயாரான ‘கனவு வாரியம்’

மின்வெட்டை மையமாக கொண்டு தயாரான ‘கனவு வாரியம்’

ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் "கோல்ட் டிக்கர்ஸ்.' வசூலை அள்ளிக் குவித்த "மேட்ரிக்ஸ்', "ஹாரி பார்ட்டர்', "பேட்மேன்' போன்ற பல படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.   இந்த நிறுவனம் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு முன், பாலிவுட் படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களை இதுவரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டதில்லை. தமிழ்ப்படத்தின் பெயர் "கனவு வாரியம்.' தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்வெட்டை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது.   காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாவும் நடிக்கிறார்…
Read More
காமெடி + திகில் நிறைந்த   ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

காமெடி + திகில் நிறைந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ்  திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்ப டத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை யும், 'யுடியூபில்' 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திகில் - நகைச்சுவை கதைக்களங்களில் உருவான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று, புதியதொரு சாதனையை இந்த திரைப்படம் பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த பாணியில் இந்நாள் வரை வெளியான மற்ற…
Read More
‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !

‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !

வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து வரும்  திரைப்படம் '8 தோட்டாக்கள்'.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர்  கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம்' 'கிரகணம்'), கலை இயக்குநர் சதீஸ் குமார் ('ஜோக்கர்', வி ஐ பி 2) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. "எங்கள் படத்தின் ஒரு பாடலுக்கு, திருவிழாவை போன்ற காட்சிகள் தேவைப்பட்டது. அதற்காக  எங்களின் கலை இயக்குநர் சதீஷ்…
Read More
சர்வர் சுந்தரம் டீசரே இம்புட்டு ஹிட்டா? – மகிழ்ச்சியில் இயக்குநர்

சர்வர் சுந்தரம் டீசரே இம்புட்டு ஹிட்டா? – மகிழ்ச்சியில் இயக்குநர்

கிட்டத்தட்ட 53 வருஷங்களுக்கு முன்னால் நாகேஷ், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து, கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த படம், 'சர்வர் சுந்தரம்.' அந்த படத்தின் கதையை கே.பாலசந்தர் எழுதியிருந்தார். தர்போது அதே பெயரில் காதல் - அதிரடி - நகைச்சுவை - செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் சந்தானம் - வைபவி ஷண்டிலியா முன்னணி கதாபாத்திரங்களிலும், நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். "நாங்கள் எதிர்பார்த்ததை விட…
Read More
தூத்துக்குடி ரெளடி கேரக்டரில் தயாராகும் ‘ரிச்சி’

தூத்துக்குடி ரெளடி கேரக்டரில் தயாராகும் ‘ரிச்சி’

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில்,  நிவின் பாலி - நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த 'ரிச்சி' படத்தில் பிரகாஷ் ராஜ்,  'யு டர்ன்' படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த 'ரிச்சி' படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும்  நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும்  மையப்படுத்தி தான் எங்களின் 'ரிச்சி' படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற  யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட்டுள்ளோம். 'ரிச்சி' என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில்  முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி,…
Read More
அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். இதனிடையே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். எப்போதும் பொது, சினிமா விழாக்களுக்கு ஃப்ரெஷ்ஷாக தாடியில்லாமல் வந்து கொண்டிருந்த விஜய் சமீபகாலமாக தாடி வளர்த்து கொண்டு வருகிறார். அப்படி தாடியுன் விஜய் நடிக்கும் கேரக்டரை சஸ்பென்ஸாக மறைத்து செதுக்கி கொண்டு இருக்கிறார், அட்லீ. விஜய் தாடியுடன் நடிக்கும் அந்த காதாபாத்திரத்தின் ஜோடியாக, ஜோதிகா நடிக்க இருக்கிறார். விஜய்யுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கும் கேரக்டர் ரோலுக்கு…
Read More
மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

"மாணவன் நினைத்தால்  நடத்திக் காட்டுவான்..." என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான  மாணவ சக்தியை  மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். 'அட்டக்கத்தி மற்றும் 'மெட்ராஸ்' படங்களில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை  'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.  பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் 'அஞ்சாதே' நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த…
Read More