துப்பாக்கி முனை நாயகன் விக்ரம் பிரபு ஜோடி- ஹன்சிகா

குலேபகாவலி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.

பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் குலேபகாவலி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் ஹன்சிகா. இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். கடந்த சில நாட்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஒளிப்பதிவை ராசாமதி கவனிக்க, எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சீனிவாசன் கவனிக்கிறார்.

ஹன்சிகா, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.