நீதானே என் பொன் வசந்தம்’  படத்தில்  நடிச்ச எனக்கு கிடைச்ச விருதுக்கு நன்றி – ஜீவா

நீதானே என் பொன் வசந்தம்’  படத்தில்  நடிச்ச எனக்கு கிடைச்ச விருதுக்கு நன்றி – ஜீவா

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா  தேர்வாகியுள்ளார். 2012ல்  கெளதம் வாசுதேவ் மேனன் . இயக்கத்தில்  'நீதானே என் பொன் வசந்தம்'  படத்தில்  நடித்ததற்காக அவர்  இவ்விருதைப்  பெறுகிறார். இது பற்றி நடிகர்    ஜீவா பேசும் போது " ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம். கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்க ளை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும்.  அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில்  அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக  என்னைச்  சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள  தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த…
Read More
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!-

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!-

தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் விருதுகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டது. 2008ம் ஆண்டிற்கு பிறகு தமிழ் திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த 5 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துளளது. அதன் படி.. 2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பசங்க படத்திற்கு முதல் பரிசு அறிவித்துள்ளது. மேலும் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மைனா 2011-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் வாகை சூட வா 2012-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் வழக்கு எண் 18/9 2013- ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் ராமானுஜர் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் குற்றம் கடிதல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருது 2009- கரண், 2010-விக்ரம், 2011-விமல், 2012-ஜீவா, 2013-ஆர்யா, 2014 சித்தார்த், ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடிகை விருது 2009- பத்மபிரியா, 2010- அமலாபால், 2011- இனியா, 2012…
Read More
மிக மிக அவசரம் படத்தின் கதை  இதுதானா?

மிக மிக அவசரம் படத்தின் கதை இதுதானா?

‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் கதையின் நாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா போலீஸாக வலம் வரவுள்ளாராம். மேலும், இயக்குநர் சீமான், ஹரீஷ், ஈ.ராமதாஸ், முத்துராமன், சக்தி சரவணன், வெற்றிக் குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘புதிய கீதை’ புகழ் இயக்குநர் ஜெகன்நாத் கதை – வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. இஷான் தேவ் இசையமைத்து வரும் இதற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். படம் குறித்து டைரக்டர்  சுரேஷ்  காமாட்சியிடம் கேட்ட போது, “நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத்தான் போலீஸ். ஆனால் அந்த போலீஸ் துறை ஒழுக்கமாக உள்ளதா? குறிப்பாக ஆண் போலீசும் பெண் போலீசும் இணைந்து…
Read More
கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை – இது தான் மீசைய முறுக்கு

கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை – இது தான் மீசைய முறுக்கு

அவ்னி மூவிஸ் சுந்தர் .c வழங்கும் " மீசைய முறுக்கு " இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c , இப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை - திரைக்கதை - வசனம் - பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயகிகள் ஆத்மீகா , மனிஷா , நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் , ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் சுந்தர்.C பேசியது :- " கிளப்புல மப்புல " பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன் அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால்…
Read More
மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி!

மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி!

எழிலின் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் கெளரவ்வின் ‘இப்படை வெல்லும்’, தளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘இரும்பு திரை’ மித்ரன் இயக்கவுள்ள புதிய படம், ப்ரியதர்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் தயாராகி நிற்கிறது. இதில் ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதனிடையே மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "மகேஷிண்டே பிரதிகரம்"  தற்போது தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் , உதயநிதி ஸ்டாலின் கதா நாயகனாக  நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்  தயாராகிறது. இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு film fare விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற "மகேஷிண்டே பிரதிகாரம்' படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை என்பதுக் குறிப்பிட தக்கது. உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல…
Read More
ராஜீவ் காந்தி தொடங்கியிருப்பது வெற்று கோஷம் இல்லை! – கொலை விளையும் நிலம் ரியாக்‌ஷன்!

ராஜீவ் காந்தி தொடங்கியிருப்பது வெற்று கோஷம் இல்லை! – கொலை விளையும் நிலம் ரியாக்‌ஷன்!

இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்கள் மற்றும் எஸ்.கவிதா இணைந்து தயாரித்து, பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா  அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. நம்  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசா யத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக பேசியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம் முதலில் திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.  நடிகர்கள் விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ், மூத்த இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர்கள் என்.லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி, ராஜு முருகன், எழில், சுப்ரமணிய சிவா, ராகவன், தாஸ் ராமசாமி, ’கணிதன்’ சந்தோஷ், ’மெட்ரோ’ ஆனந்த், இசையமைப்பாளர் ஜோஹன் தயாரிப்பாளர்கள் முருகராஜ், சக்திவேலா, தனஞ்செயன், பூச்சிமுருகன் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வெ.ஜீவக்குமார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 50 நிமிடங்கள் ஓடிய கொலை விளையும் நிலம் ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க…
Read More
பண்டிகை  -எல்லோருக்கும் கொண்டாட்டமாக மாறுமா? குழி பறிக்குமா??

பண்டிகை -எல்லோருக்கும் கொண்டாட்டமாக மாறுமா? குழி பறிக்குமா??

கேளிக்கை வரி போராட்டத்தில் நான்கு நாட்கள் மூடலுக்கு பின் திறக்கப்பட்ட தியேட்டர்களை நோக்கி அலை அலையாக மக்கள் வரவில்லை. வனமகன், இவன் தந்திரன், பாகுபலி படங்களுக்கு மட்டும் குறைந்த பட்ச பார்வை யாளர்கள் வந்தனர். சூலை 14 அன்று1. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் 2. திரி 3 . ரூபாய், 4. பண்டிகை என நான்கு படங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. தமிழகத்தில் படங்களை திரையிட இந்த வாரம் அதிக தியேட்டர்கள் காலியாக இருந்தாலும் பண்டிகை, திரி படங்களை திரையிட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்களாம். என்ன காரணம்? அஞ்சலி படத்தில் குழந்தை நட்த்திரமாக அறிமுகமான கிருஷ்ணா, பண்டிகை படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் 39 வயதாகும் நாயகன் கிருஷ்ணா தமிழ் திரையுலகில் வியாபார முக்கியத்துவம் மிக்க நடிகராக வளரவில்லை, 2008 முதல் அலிபாபா, கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்ல வராயன், வன்மம், யட்சன், யாக்கை மற்றும்…
Read More
மதன் கார்க்கியின் மனசு ஆஹா. ஓஹோ! – நிபுணன் டைரக்டர் பாராட்டு!

மதன் கார்க்கியின் மனசு ஆஹா. ஓஹோ! – நிபுணன் டைரக்டர் பாராட்டு!

அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் "நிபுணன்".இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண்  வைத்தியநாதன்  இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி ஆனது. "இதுவும் கடந்து போகும்" என்கிற  வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில்  ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நவீணின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த  பாடலை  தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.  அந்த பாடலை தான் இயற்ற வில்லை என்றாலும் , அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார  வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதி  உள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிட தக்கது. "மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை…
Read More
விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்‌ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதன் சாராம்சம்:- “தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன். தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள்,…
Read More