எழிலின் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் கெளரவ்வின் ‘இப்படை வெல்லும்’, தளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘இரும்பு திரை’ மித்ரன் இயக்கவுள்ள புதிய படம், ப்ரியதர்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் தயாராகி நிற்கிறது. இதில் ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இதனிடையே மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற “மகேஷிண்டே பிரதிகரம்” தற்போது தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் , உதயநிதி ஸ்டாலின் கதா நாயகனாக நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாராகிறது. இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு film fare விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற “மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை என்பதுக் குறிப்பிட தக்கது.

உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகை நமீதா பிரமோத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி, எம் எஸ் பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர். சமுத்திரகனி வசனம் இயற்ற, டர்புக சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் four frames ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது. வருகின்ற 19 ஆம் தேதி எழில் கொஞ்சும் குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடை பெற உள்ளது.
இயக்குனர் பிரியதர்ஷனும், உதயநிதியும் இணைந்து பணியாற்றும் முதல் படமான , இத்திரைப்படம் மிகவும் எதிர்பார்க்க படும் படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.
Related posts:
தமிழகத்துக்கு தண்ணீர்! - கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி கடிதம்July 2, 2017
பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..!January 8, 2019
S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜுனியர் என்.டி.ஆர் - அஜய் தேவ்கன் - சமூத்திரகனி நடிக்கும் "ஆர் ஆ...March 17, 2019
'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த 'விஜய் தேவரகொண்டா' நாயகி!January 3, 2021
ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்"வினயை விதேயா ராமா"!January 27, 2019