கேளிக்கை வரி போராட்டத்தில் நான்கு நாட்கள் மூடலுக்கு பின் திறக்கப்பட்ட தியேட்டர்களை நோக்கி அலை அலையாக மக்கள் வரவில்லை. வனமகன், இவன் தந்திரன், பாகுபலி படங்களுக்கு மட்டும் குறைந்த பட்ச பார்வை யாளர்கள் வந்தனர். சூலை 14 அன்று1. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் 2. திரி 3 . ரூபாய், 4. பண்டிகை என நான்கு படங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. தமிழகத்தில் படங்களை திரையிட இந்த வாரம் அதிக தியேட்டர்கள் காலியாக இருந்தாலும் பண்டிகை, திரி படங்களை திரையிட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.
என்ன காரணம்? அஞ்சலி படத்தில் குழந்தை நட்த்திரமாக அறிமுகமான கிருஷ்ணா, பண்டிகை படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் 39 வயதாகும் நாயகன் கிருஷ்ணா தமிழ் திரையுலகில் வியாபார முக்கியத்துவம் மிக்க நடிகராக வளரவில்லை, 2008 முதல் அலிபாபா, கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்ல வராயன், வன்மம், யட்சன், யாக்கை மற்றும் ரீலீசுக்கு காத்திருக்கும் விழித்திரு, கிரகணம், பண்டிகை, களறி என 14 படங்களில் 10 படங்கள் வெளியாகி உள்ளது. அனைத்தும் நேரடி அல்லது விநியோக அடிப்படையில் ரீலீஸ் ஆன படங்களே. கழுகு, யாமிருக்க பயமேன் படங்கள் சுமாரான வசூலை தந்த படங்கள் ஆனால் லாபம் கிடையாது,.
ஆராஸ் சினிமா வெளியீடாக சூலை 14 அன்றுவெளியாக உள்ள “uண்டிகை” எந்த ஏரியாவும் வியாபாரமாகவில்லை. விநியோக அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள பண்டிகை படத்தை திரையிட தியேட்டர்உரிமையாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஆராஸ் சினிமா வெளியிட்டால் படம் பப்படமாகி விடும். சில படங்கள் நட்சத்திரங்க ளுக்காக ஓடியிருந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழ் சினிமாவில் ஆராஸ் நிறுவனத்தால் அனுபவிக்க முடியவில்லை. அதிலும் தொடர்தோல்வி படங்களின் நாயகன் கிருஷ்ணா நடித்து உள்ள படம் பண்டிகை எல்லோருக்கும் கொண்டாட்டமாக மாறுமா குழி பறிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.