தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'ஈநாடு' நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள். ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள்…
Read More
புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது  விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது. ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை.…
Read More
வெப்பன் திரை விமர்சனம்!

வெப்பன் திரை விமர்சனம்!

இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில், இந்த வாரம் திரையரங்குகளுக்கு வந்திருக்கும் திரைப்படம் "வெப்பன்" சூப்பர் ஹீயூமனை மையப்படுத்தி முழுக்க முழுக்க ஆக்சன் கதையில் வந்திருக்கும் வந்திருக்கிறது இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதைகள் இந்தியாவில் அதிகம் வந்ததில்லை, ஹாலிவுட் மாதத்திற்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற வகையில் பல வருடங்களாக வந்துவிடுகிறது ஆனால் உலகம் முழுக்க பார்க்கையாக எங்குமே சூப்பர் ஹீரோ கான்செப்ட் படம் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அவ்வப்போது இந்த மாதிரி படங்கள் முயற்சிக்கப் பட்டாலும் அது பெரிய அளவில் பெரிய வெற்றியை தந்ததில்லை, அதற்கு காரணம் இங்கு உள்ள வாழ்வியல் சூழலும், டெக்னாலஜியும் அதற்கு சரியாக ஒத்துப் போகாதது தான். சரி சத்யராஜ் இப்படத்தில் சூப்பர் ஹீயூமனாக நடித்திருக்கிறார். சூப்பர் ஹீரோவாக ஜெயித்திருக்கிறாரா ? இந்த படம் என்ன அனுபவம் தருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சூப்பர் சீரம் பயன்படுத்தி, சூப்பர்…
Read More
‘Big Shorts – Season 3’ போட்டிக்காக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளன!

‘Big Shorts – Season 3’ போட்டிக்காக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளன!

  மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக 'Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக' மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்,…
Read More
முதல் படம் போல் தோன்றவில்லை! பிதா பட அறிமுக விழாவில் திருமுருகன் காந்தி!

முதல் படம் போல் தோன்றவில்லை! பிதா பட அறிமுக விழாவில் திருமுருகன் காந்தி!

இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில் தயாரிப்பாளர் சுப்பிரமணி வழங்கும் 'பிதா' திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊட்க நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாக செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள். திருமுருகன் காந்தி பேசியதாவது., திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்க கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது.…
Read More
தந்தைக்காக இசை நடன நிகழ்வை அரங்கேற்றிய ஸ்ருதிஹாசன்!

தந்தைக்காக இசை நடன நிகழ்வை அரங்கேற்றிய ஸ்ருதிஹாசன்!

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார். ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும்…
Read More
BAD BOYS : RIDE OR DIE மீண்டும் ஹிட்டடித்ததா?

BAD BOYS : RIDE OR DIE மீண்டும் ஹிட்டடித்ததா?

அமெரிக்க திரை வரலாற்றில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பேட் பாய்ஸ் (1995) மயாமியைச் சேர்ந்த இரண்டு காமெடி போலீஸ் அதிகாரிகள் பண்ணும் அழிச்சாட்டியங்கள் அவர்கள் சிக்கிக் கொள்ளும் கேஸ்கள் பற்றியதுதான் இந்த திரைப்படம். இரண்டு கருப்பின் அதிகாரிகள், காமெடி, ஆக்சனுடன் கலக்கல் கமர்சியல் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் அமெரிக்க திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பேட் பாய்ஸ் தொடர் வரிசையாக 3 பாகங்கள் இதுவரை வந்திருக்கின்றன 'பேட் பாய்ஸ்' பட வரிசையில் 3 வது பாகமான , 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் கதையின் தொடர்ச்சியாக இப்போது நான்காவது பாகம் இப்போது வந்துள்ளது . இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு…
Read More
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி -‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ பட நடிகர் ஹிருது ஹாரூன்!

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி -‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ பட நடிகர் ஹிருது ஹாரூன்!

நமது பிரதமர்  நரேந்திர மோடி , கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் #PayalKapadia பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில், ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தின் நடிகர்களில் ஒருவரான ஹிருது ஹாரூன் இது குறித்து கூறுகையில்… இயக்குநர் #PayalKapadia, தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர், எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைவருக்கும், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். முன்னதாக பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம்…
Read More
இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி! -‘P T சார்’ பட வெற்றி விழாவில் பாக்கியராஜ்!

இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி! -‘P T சார்’ பட வெற்றி விழாவில் பாக்கியராஜ்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் 'P T சார்'. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது… ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு என் முதல் நன்றி, அவர் நடிக்க நல்ல கதை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைக்காமல், நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார்…
Read More
நரபலியை சொல்லும் அக்காலி எப்படி இருக்கிறது ??

நரபலியை சொல்லும் அக்காலி எப்படி இருக்கிறது ??

முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் மாறுபட்ட களத்தில், திரில்லர் திரைப்படமாக வந்துள்ள படம்அக்காலி. அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். PBS ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொடர் அமானுஷ்ய கொலைகளை பற்றி அந்த காலத்தில் விசாரணையில்இருந்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் இன்னொரு பெண் அதிகாரியான ஸ்வயம் சித்தா விசாரிப்பதாகதுவங்கும் கதை, அதன் பிறகு அந்த நேரத்தில் அந்த வழக்கில் நடந்த பல அதிர்ச்சியான விஷயங்களைஜெயக்குமார் சொல்ல சொல்ல கதை விரிவடைகிறது. 6 பேர் நரபலி கொடுக்கப்பட, 7வதாக ஒரு பத்திரிக்கைநிருபரும் அங்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இதை எல்லாம் ஜானிஸ் என்ற ஒரு இளம் சூனியக்கார பெண்செய்தார் என நினைக்கும் காவல்துறை…
Read More