இமானுக்கு இசை வள்ளல் பட்டம் – “பேபி & பேபி” திரைப்பட தயாரிப்பாளர் யுவராஜ் !!

இமானுக்கு இசை வள்ளல் பட்டம் – “பேபி & பேபி” திரைப்பட தயாரிப்பாளர் யுவராஜ் !!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது... எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில்…
Read More
நானியின் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

நானியின் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் :) இது அற்புதமான காவியமாக…
Read More
கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் எஸ். யூ. அருண் குமாரின் திருமணம்!!

கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் எஸ். யூ. அருண் குமாரின் திருமணம்!!

திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். யூ. அருண்குமார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் 'சேதுபதி', 'சிந்துபாத்' என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஏ. அஸ்வினி என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து நேற்று மதுரையில் உள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் பெற்றோர்கள் - நண்பர்கள்- உறவினர்கள்-…
Read More
ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !!

ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !!

இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர்…
Read More
படம் எடுப்பது தனி போராட்டம் – குடும்பஸ்தன்  மணிகண்டன் !!

படம் எடுப்பது தனி போராட்டம் – குடும்பஸ்தன் மணிகண்டன் !!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு…
Read More
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயக்குநர் ராமின் “பறந்து போ” படத்தை வழங்குகிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயக்குநர் ராமின் “பறந்து போ” படத்தை வழங்குகிறது !!

மிர்ச்சி சிவா நடிப்பில், கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள்.…
Read More

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது. ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்…
Read More
ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !!

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !!

இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி…
Read More
கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ' தண்டேல் 'எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர்…
Read More
ட்ரெண்டிங்கில் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல் !!

ட்ரெண்டிங்கில் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல் !!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார். 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா ''…
Read More