இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில், இந்த வாரம் திரையரங்குகளுக்கு வந்திருக்கும் திரைப்படம் “வெப்பன்” சூப்பர் ஹீயூமனை மையப்படுத்தி முழுக்க முழுக்க ஆக்சன் கதையில் வந்திருக்கும் வந்திருக்கிறது இந்த திரைப்படம்
சூப்பர் ஹீரோ கதைகள் இந்தியாவில் அதிகம் வந்ததில்லை, ஹாலிவுட் மாதத்திற்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற வகையில் பல வருடங்களாக வந்துவிடுகிறது ஆனால் உலகம் முழுக்க பார்க்கையாக எங்குமே சூப்பர் ஹீரோ கான்செப்ட் படம் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அவ்வப்போது இந்த மாதிரி படங்கள் முயற்சிக்கப் பட்டாலும் அது பெரிய அளவில் பெரிய வெற்றியை தந்ததில்லை, அதற்கு காரணம் இங்கு உள்ள வாழ்வியல் சூழலும், டெக்னாலஜியும் அதற்கு சரியாக ஒத்துப் போகாதது தான். சரி சத்யராஜ் இப்படத்தில் சூப்பர் ஹீயூமனாக நடித்திருக்கிறார். சூப்பர் ஹீரோவாக ஜெயித்திருக்கிறாரா ? இந்த படம் என்ன அனுபவம் தருகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சூப்பர் சீரம் பயன்படுத்தி, சூப்பர் ஹியூமன்களை உருவாக்கி, போரில் பயன்படுத்தினார். அவருடன் இணைந்த நேதா ஜி அது மனிதனை வதைக்கும் ஒரு விஷயம் என அதை நிராகரித்து விட்டார். ஆனால் அவர் குழுவில் இருந்த சிலர் சூப்பர் ஹீயூமனாக மாறி போர் புரிந்திருக்கிறார்கள் அதில் தப்பிய ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவரைத் தேடும் வில்லன் கும்பல், வசந்த ரவி கும்பல் என இப்படத்தின் கதை ஆரம்பிக்கிறது.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தில் ஒரு சிறுவனை ஒரு அபார சக்தி காப்பாற்றுகிறது. அதை சூப்பர் ஹியூமன் தான் காப்பாற்றினார் என வசந்த் ரவி க்ரூப்பும், வில்லன் குரூப்பும் அவரை தேட ஆரம்பிக்கிறது. இன்னொரு பக்கம் அரசாங்கமும் அவரை தேடுகிறது. மூவரும் சத்யராஜை கண்டுபிடித்தார்களா? அவருக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதுதான் இப்படத்தின் மையக்கதை.
கேட்பதற்கு என்னவோ சுவாரசியமாகத்தான் இருக்கிறது ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து நம்மளை நடுக்காட்டில் பாதை தெரியாத வழியில் விட்டு விட்டு சென்றது போலவே இருக்கிறது. திரைக்கதையும் அங்கங்கே மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறது. எதை நோக்கி பயணிக்கிறது என்பது எவருக்குமே தெரியவில்லை.
பல சின்ன பட்ஜெட் ஆக்சன் ஹாலிவுட் படங்கள் இந்த மாதிரி தான் எழுதப்படும், அதேபோல இப்ப படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அறையில் நான்கு பேர் உட்காந்து பேசுவது, கலர் டோனை மாற்றி விட்டு, பிரம்மாண்ட செட் போன்ற தோற்றம் தருவது, ஸ்லோ மோஷன் என சினிமா டெக்னிக்கை பயன்படுத்தி சின்ன பட்ஜெட்டில் பெரிய பிரம்மாண்ட படத்தை தர முயன்றிருக்கிறார்கள் ஆனால் திரைக்கதையில் மாயாஜாலம் இல்லாததால் படம் தொங்கி விடுகிறது.
சத்யராஜ் வருகிறார் இன்டர்வல் ஃபைட் கிளைமாக்ஸ் ஃபைட் தவிர அவர் சூப்பர் ஹியூமன் ஆக எந்த வகையிலும் மெனெக்கெட்டு நடிக்கவில்லை, வெறும் கையசைத்தால் சூப்பர் ஹீயுமன் என படத்தில் வைத்து விட்டார்கள். மிரட்டல் முகத்துடன் கையை ஆட்டுகிறார். ஹாலிவுட் வந்த எக்ஸ் மேன் பிரிடேட்டர் படங்கள் எல்லாவற்றிலும் உள்ள கதையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கலக்கி கொடுத்தது போல் இருக்கிறது.
வசந்த் ரவி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்கிறார் அதற்காக வேண்டுமானால் வரி பாராட்டலாம், ஆனால் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இதில் அவருக்கு எந்த ஒரு பெரிய வேலையும் இருப்பதாகவும் தெரியவில்லை கிளைமாக்ஸ் அட போங்கடா என சொல்ல வைத்து விடுகிறது.
தன்யா ஹோப் எதற்காக படத்தில் வருகிறார் என்பதை தெரியவில்லை அவரைப் போல தான் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகவும் மாறி இருக்கும் ராஜுவ் மேனன் நல்ல கேரக்டர்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார் அவர் எப்படி இப்படத்தை ஒப்புக்கொண்டார் என்பது தான் தெரியவில்லை
படத்திற்கு மிகபெரிய பலம் ஒளிப்பதிவு, சிஜி இசை பெரிதாக ஈர்க்கவில்லை.
ஆக்சன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கிளப்பிய இந்த வெப்பன் திரைப்படம் பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது