22
Aug
இயக்கம் - சபரீஷ் நந்தா நடிகர்கள் - வசந்த் ரவி, சுனில், அணிகா இசை - அஜ்மல் தக்சீன் தயாரிப்பு - ஜே எஸ் எம் மூவி புரொடக்ஷன் - அஃப்ர் சாதிக் வஸந்த ரவி தனது முதல் படத்திலிருந்து நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அவரின் நடிப்பில் படம் வருவதற்கு முன்பே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது அதை நிறைவேற்றி இருக்கிறதா படம் ? ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதனால், அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட, அவரது மதுப்பழக்கம் அதிகமாகிறது. இது பிடிக்காத அவரது மனைவி அவர் மீது கோபம் கொள்கிறார். இதற்கிடையே, அவரின் பார்வை திடீரென்று பறிபோகிறது. இதனால் அவரது மனைவி எல்லாமுமாக இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல்துறை சரியான துப்பு…
