மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசிக்கப்பட்டிருக்கிறது இப்பாடல்.

பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது கூடுதல் சுவை. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.
அடுத்த ஹிட் டுக்கு ஆயத்தமாகி விட்டார் மெட்ரோ சிரிஷ்.
Related posts:
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் படமான ‘ஜாங்கோ’ தயார்!September 7, 2021
கனிகாவின் லிவ்-இன்' ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறதுJune 4, 2023
“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ் !!October 18, 2024
நட்டியுடன் 'சாயம்' இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் 'கூராய்வு'June 18, 2022
என் ஊர் மெட்ராஸ் என்பதால் உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன்- கலையரசன்!July 27, 2024