ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றாரா சூரி ? – கருடன் திரை விமர்சனம் !!

ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றாரா சூரி ? – கருடன் திரை விமர்சனம் !!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் காலம். சந்தானம், யோகி பாபுவிற்கு பிறகு, ஒரு முழு நீள ஹீரோவாக தன்னை பலப்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ளார் சூரி. விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வேறு தளத்தில் களமிறக்க, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, சூரி அந்த ரூட்டில் தன்னை கச்சிதமாக வடிவமைத்து கருடன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த முறை வெற்றி பெற்ற மிகப்பெரிய நடிகர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஒரு அட்டகாசமான இயக்குனர் கையில், வெற்றிமாறன் கதையில் சூரி மீண்டும் சொல்லி அடித்திருக்கிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஸ்வேதா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சூரி நாயகனாக களமிறங்கியிருக்கும் கருடன் திரைப்படம் எப்படி இருக்கிறது ? சூரி படத்தில் சசிகுமார் துணைக்கதாப்பாத்திரம் என்பதே ஒரு ஆச்சரியம்தான். இந்த மாதிரி நிறைய ஆச்சர்யங்கள் படத்தில் இருப்பதுதான் கருடன் படத்தின் மிகப்பெரிய பலம்…
Read More