இங்க நான் தான் கிங்கு – கிங்குதானா?

நகைச்சுவையாக நடிகராக களமிறங்கி, தற்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம். கடந்த இரண்டு படங்களில் கலக்கியவர் இப்போது வெளியாகியிருக்கும் இங்க நான் தான் கிங்கு ஹாட்ரிக் அடித்ததா ? எப்படி இருக்கிறது ?

சந்தானம் படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான் அது வயிறு வலிக்க சிரித்துவிட்டு வர வேண்டும் அவ்வளவு தான் அதை கடந்த சில படங்களில் உணர்ந்துகொண்ட சந்தானம் அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இங்க நான் தான் கிங்கு படத்திலும் சொல்லி அடித்திருக்கிறது அவரது குழு.

மேட்ரிமோனியல் அலுவலகத்தில் பணிபுரியும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதால் ரூ.25 லட்சம் கடன் வாங்கி அபார்ட்மெண்ட் வாங்குகிறார். அந்தக் கடனை அடைக்க பொண்ணு தேடுகிறார். புரோக்கர் பார்த்த ஒரு ஜமீன் பெண்ணை ஆசையுடன் திருமணம் செய்கிறார். திருமணம் செய்து கொள்ளும் வெற்றியின் வாழ்க்கை, கல்யாணத்திற்கு பின் தலைகீழாக மாறுகிறது. அதன் பின் நடக்கும் ஒரு கொலை அதிலிருந்து தப்பிக்க குடும்பமாக என்ன பண்ணுகிறார்கள் என்பது தான் படம் அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் கதை..

முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் வயிறு வலிக்க சிரிச்சுகிட்டே இருக்க வைக்கும் அட்டகாசமான திரைக்கதை. சந்தானம் கல்யாணம் ஆகுறதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறதை பார்க்கும் போது நாலு கல்யாணம் அஞ்சு கல்யாணம் பண்ணவன்லாம் சந்தோசமா இருக்கான்; ஒரே ஒரு கல்யாணம் பண்ண இவர் படுகிற அவஸ்தை இருக்கே அப்பப்பா முடியலடா சாமி என்று சொல்ல தோணுது. சந்தானத்தை ஏமாதிட்டு ‘தகிட தத்திதோம் ‘ என விக்ரம் பட கிளைமாக்ஸ் மியூசிக் பேக் ரவுண்டில் மனோ பாலா நடந்து போகும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது.

அதிலும் தம்பி ராமையாவுக்கு பல படங்களுக்கு பிறகு பாடி லாங்வேஜ் முதல் தெறிக்கவிட்டுள்ளார். படத்தின் பெரிய ப்ளஸ் ஒவ்வொரு சிரிப்பு நடிகர்களும் ஒவ்வொரு சீன் வந்தாலும் கலக்கியிருக்கிறார்கள். அதே போல் திரைகதையும் பரபரவென நகர்ந்து செல்கிறது.

சந்தானம் வழக்கம்போல் தன் ஏரியா உணர்ந்து இறங்கி அடித்திருக்கிறார். அதிலும் மற்ற நடிகர்களுக்கு இடம் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு. தமிழி நாயகி அறிமுக நாயகி என்ற உணர்வே வராமல் சிறப்பாக நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே ஒரு சூப்பர் காமெடி படத்தை தந்துள்ளார் டைரக்டர் ஆனந்த் நாராயணன். சந்தானம் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்திருக்கிறார் இமான் அசத்தியிருக்கிறார்.

முதல் பாதி வெடிகுண்டு, அடுத்த பாதியில் சிரிப்பு கொஞ்சம் கம்மி தான் ஆனால் இந்த கோடையில் குடும்பத்தோடு சிரித்து மகிழ அசத்தலான படமாக தந்து கிங்க் என நிரூபித்திருக்கிறார்கள்.