மதுரை அன்பு டார்ச்சர்: இயக்குநர் சசிகுமார் பார்ட்னர் சூசைட்!

0
313

நட்புக்காகவும், காதலுக்காகவும் உயிரையே கொடுப்பது போல் நடிக்கும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மதுரைக்காரர் சசிகுமார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் சசிகுமாரின் உறவினருமான அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். பசங்க, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களில் ஓரிரு காட்சியில் நடித்திருக்கிறார். இவர் சசிகுமாரின் உறவினரும் ஆவார். இவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல் இருக்கும் அவரது வீட்டில் நடந்து இருக்கிறது.

இறந்த அசோக்குமார் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பனி புரொடக்‌ஷன் அலுவலக நிர்வாகி யாகியானதால் கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.

தமிழ் சினிமாவின் முக்கிய பைனான்சரான மதுரை அன்பு என்பவர் கொடுத்த டார்ச்சரால் தான் அசோக் தற்கொலை செய்துகொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ன கோணத்திலும் போலீசார் விசாரணையை துவக்கியிருக்கின்றனர். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

 இந்த கடிதத்த்தில் அவர் எழுதி இருப்பது இதுதான் :  என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை. எனக்கு, சசிகுமார் கடவுளைவிட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார். யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் (காவல்துறை), அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே…

எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.

எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை. எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.

எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’. இப்படிக்கு பா. அசோக் குமா