அமிகோ காரேஜ் விமர்சனம் !!

இயக்குனர்: பிரசாந்த் நாகராஜன்
எடிட்டர்: ரூபன் – சிஎஸ் பிரேம்குமார்
இசை: பாலமுரளி பாலு

நடிகர்கள் – ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், தீபா பாலு, தசரதி

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்
இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் அமிகோ காரேஜ். அமிகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நட்பு என அர்த்தமாம், படமும் நட்பின் பெருமையை தான் பேசுகிறது.

ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ஒரு கேங்ஸ்டராக அவனை மாற்றுகிறது, அவன் எப்படி அந்த வாழ்க்கையில் இருந்து வெளிவரலாம் என்பதுதான் இந்த திரைப்படம்

திரைப்படங்களில் காட்டுவது போலவும், பேப்பர்களில் படிப்பது போலவும் கேங்ஸ்டராக வாழ்வது என்பது அத்தனை கெத்தானது இல்லை. அதன் பின்னால் உயிரே போகும் பிரச்சனைகள் தான் அதிகம். பிரச்சனைகளால் வாழ்க்கையே தொலைந்து போகும், என்கிற கருத்தை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார்கள். அதற்காக கண்டிப்பாக படக்குழுவினரைப் பாராட்டலாம்.

ஹீரோக்களை கேங்ஸ்டர்களாக காட்டி கேங்ஸ்டர் என்றாலே கெத்து என்று சொல்லி வந்த சினிமாவில் இப்படி ஒரு மாற்றுப்பார்வை கண்டிப்பாக தேவை

கேங்ஸ்டர் கதையும் நட்பின் கதையும் கலந்து சொல்கிறது இந்த அமிகோ காரேஜ். ருத்ரா கேங்ஸ்டர் ஆகக்கூடாது என்பதில் அவரது நண்பர் உறுதியாக இருக்கிறார். ருத்ராவை எப்படியாவது வாழ்க்கையில் நன்றாக கொண்டு வந்துவிட அவர் முயற்சிக்கிறார் ஆனால் ருத்ராவின் வாழ்க்கை தடம் மாறுகிறது அதிலிருந்து அவர் வெளி வருகிறாரா என்பதுதான் திரைப்படம்.

படத்தின் கதை அருமையாக இருந்தாலும் அதை சொன்ன விதமும் அதற்கான காட்சி அமைப்புகளும், உருவாக்கிய விதமும் கச்சிதமாக இல்லை. ஒரு வகையில் படத்தின் பட்ஜெட்டும் ஒரு சிறு படத்தை பார்ப்பது போன்ற உணர்வைத் தந்து கொண்டே இருக்கிறது.

மகேந்திரன் உட்பட, படத்தின் நடிகர்கள் எல்லோருமே சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனுக்கு கொஞ்சம் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம் கூட்டி இருக்கிறது.

படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் கூட்டி இருந்தால் இன்னும் ஒரு சிறப்பான சினிமாவாக இப்படம் பேசப்பட்டிருக்கும்.

அமிகோ காரேஜ் நட்பின் பெருமை சொல்லும் படம்.