அமிகோ காரேஜ் விமர்சனம் !!

அமிகோ காரேஜ் விமர்சனம் !!

இயக்குனர்: பிரசாந்த் நாகராஜன் எடிட்டர்: ரூபன் - சிஎஸ் பிரேம்குமார் இசை: பாலமுரளி பாலு நடிகர்கள் - ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், தீபா பாலு, தசரதி மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் அமிகோ காரேஜ். அமிகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நட்பு என அர்த்தமாம், படமும் நட்பின் பெருமையை தான் பேசுகிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ஒரு கேங்ஸ்டராக அவனை மாற்றுகிறது, அவன் எப்படி அந்த வாழ்க்கையில் இருந்து வெளிவரலாம் என்பதுதான் இந்த திரைப்படம் திரைப்படங்களில் காட்டுவது போலவும், பேப்பர்களில் படிப்பது போலவும் கேங்ஸ்டராக வாழ்வது என்பது அத்தனை கெத்தானது இல்லை. அதன் பின்னால் உயிரே போகும் பிரச்சனைகள் தான் அதிகம். பிரச்சனைகளால் வாழ்க்கையே தொலைந்து போகும், என்கிற கருத்தை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார்கள். அதற்காக கண்டிப்பாக படக்குழுவினரைப் பாராட்டலாம். ஹீரோக்களை கேங்ஸ்டர்களாக காட்டி கேங்ஸ்டர் என்றாலே கெத்து என்று…
Read More