அமிகோ காரேஜ் விமர்சனம் !!

அமிகோ காரேஜ் விமர்சனம் !!

இயக்குனர்: பிரசாந்த் நாகராஜன் எடிட்டர்: ரூபன் - சிஎஸ் பிரேம்குமார் இசை: பாலமுரளி பாலு நடிகர்கள் - ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், தீபா பாலு, தசரதி மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் அமிகோ காரேஜ். அமிகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நட்பு என அர்த்தமாம், படமும் நட்பின் பெருமையை தான் பேசுகிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ஒரு கேங்ஸ்டராக அவனை மாற்றுகிறது, அவன் எப்படி அந்த வாழ்க்கையில் இருந்து வெளிவரலாம் என்பதுதான் இந்த திரைப்படம் திரைப்படங்களில் காட்டுவது போலவும், பேப்பர்களில் படிப்பது போலவும் கேங்ஸ்டராக வாழ்வது என்பது அத்தனை கெத்தானது இல்லை. அதன் பின்னால் உயிரே போகும் பிரச்சனைகள் தான் அதிகம். பிரச்சனைகளால் வாழ்க்கையே தொலைந்து போகும், என்கிற கருத்தை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார்கள். அதற்காக கண்டிப்பாக படக்குழுவினரைப் பாராட்டலாம். ஹீரோக்களை கேங்ஸ்டர்களாக காட்டி கேங்ஸ்டர் என்றாலே கெத்து என்று…
Read More
சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இயக்குநர்-அரசியல் பிரமுகமான சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி…
Read More