விஜய் டிவி ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மறக்குமா நெஞ்சம்.
இந்த படத்தை ராகோ. யோகேந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் யோகேந்திரன் தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சச்சின் வாரியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோபி துரைசாமி, ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
படத்தில் ரக்சன், தீனா, ஸ்வேதா ஆகியோர் பள்ளி படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். பின் இவர்கள் பள்ளி பருவத்தை முடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும்போது பருவத்தை ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்திருக்கிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் பழைய மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு பள்ளிக்காலத்திற்கு பழைய மாணவர்கள் வந்தால் 96 படம் போல் யோசித்து எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆம் வெறுமனே முயற்சித்திருக்கிறார்கள்
படத்தில் ரக்சன், தீனா இருவரின் காமெடியும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, தீனா உடைய நகைச்சுவை டைமிங்க் ஒர்க்கவுட் ஆகிறது. ஆனால் படத்தின் காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை, அதனால் படம் முழுக்க நாம் எதிர்பார்ப்பது தான் நடக்கிறது. நிறைய மொக்கை காமெடிகளுக்கு நடுவே சில நல்ல காமெடிகளும் வந்து போகிறது. பள்ளி கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டி எல்லோரையும் ஈர்க்கும் அருமையான வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.
படத்தின் பட்ஜெட் காட்சிகளில் தெரிவது படத்திற்கு மைனஸ். பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது.இரண்டாம் பாதியில் தேவையில்லாத நிறைய காட்சிகள் வந்து செல்கின்றது. சில குறைகளையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று சேர்ந்தால் இந்த படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.