சென்ற ஆண்டு தமிழில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப் படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்ப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது.
சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Related posts:
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? - ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!July 5, 2017
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்!September 1, 2020
ஆதி யோகியான சிவன் போக்கைப் பற்றிச் சொல்லும் ‘மாயன்’February 14, 2019
MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!March 9, 2021
சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள "ராஜ வம்சம் " பொங்கல் 2020 வெளியீடு !December 1, 2019