ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!

மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாக உள்ளது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்துள்ளார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என இயக்குநர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Jailer' first look: Dhyan Sreenivasan's next is a period thriller | Malayalam  Movie News - Times of India

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பொருத்தமாக இருப்பதாகவும். எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுது. மலையாள ஜெயிலர் பட இயக்குனர் முன்னதாகவே இந்தப் பெயரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது .