28
Sep
இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழும் இரண்டு இளம் பெண்கள், எதிராரத ஒருசூழலில் சந்தித்து நண்பர்களாக பழகி வருகின்றனர் , இதன் பின் தங்களை அறியாமலே காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள், இவர்களின் காதலை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லை புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ்…