சர்ச்சைகளின் நாயகன் பாலாவின் “வணங்கான்” போஸ்டரே மிரட்டல் !!

 

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணாங்கான் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே புயலாக தாக்கியவர் இயக்குநர் பாலா. எப்போதும் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும் அவரது படங்கள் மனிதம் பேசும். அனைவரையும் பிரமிக்க வைக்கும். சேது முதல் நாச்சியார் வரை அவரது ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் நீங்காத இடம் பிடிப்பவை.

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை V House Production சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மாநாடு படதிற்குப் பிறகு இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையுமென தெரிகிறது.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரே தற்கால சர்ச்சைகளை அழுத்தமாக பேசும் வகையில் அட்டகாசமாக அமைந்துள்ளது.

போஸ்டரில் சேற்றில் குளித்த உடலுடன், ஒரு கையில் பெரியார் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடன் மிரட்டலாக காட்சி தருகிறார் அருண் விஜய். கடவுள் மத நம்பிக்கைகள் பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட்டு வரும் தற்காலத்தில் இந்த போஸ்டர் கதை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.

அனைத்து கேள்விகளுக்கும் வணங்கான் மூலம் பாலா பதிலளிப்பாரா என்று பார்க்கலாம்.