ஐந்து கதானாயகிகளுடன் நட்டி நடித்துள்ள ”வெப்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

அறிமுகம இயக்குனர் ஹாரூன் எழுதி இயக்கியுள்ள சைக்கோ-த்ரில்லர் படம் தான் ”வெப்”. இதில் நட்டி என்ற நடராஜன் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய வேடத்தில் அனன்யா மணி, ஷாஷ்வி பாலா மற்றும் சுபப்ரியா மலர் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். இப்படத்தை வேலன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் விஎம் முனிவேலன் தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி ஒலிகள் மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 4 அன்று திரையில் வரவிருக்கிறது , இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில்

நடிகர் நட்டி நடராஜன் பேசியதாவது,

முதலில் தயாரிப்பாளர் முனிவேலன் சாருக்கு நன்றி , எங்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி யுடன் சம்பளம் குடுத்தார், படப்பிடிப்பில் எனக்கு மட்டுமில்லை அனைத்து தொழிலாலிக்கும் தேவையை அரிந்து பூர்த்தி செய்தார் அவருக்கு எனது நன்றி , அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் நன்றி, இயக்குனருக்கு இது முதல் படம், இதற்கு முன்னர் யாரிடமாவது உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளீர்களா என்று கேட்டேன் இல்லை என்றார், குரும்படம் எதாவது எடுத்துள்ளீர்களா என்று கேட்டேன் அதும் இல்லை என்றார், எனினும் அவரது துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது , நல்ல வேளை தெரிந்த நபர் சுலபமாக படத்தை எடுத்துவிட்டார், கார்த்திக் ராஜாவின் இசை அழகாக வந்துள்ளது பிண்ணனி இசையில் மிகுந்த மெனக்கெடல் செய்துள்ளார் , இந்த்ப் படத்தில் எனக்கு ஐந்து கதாநாயகிகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் , படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் , அனைவருக்கும் நன்றி.

Natty's Web gets release date- Cinema express

இயக்குனர் ஹாரூன் பேசியதாவது,

எனக்கு இது முதல் மேடை இதற்கு தயாரிப்பாளர் முனிவேலன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் , நான் அவரை அண்ணன் என்றுதான் கூறுவேன், எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை இருந்தாலும் என்னை நம்பி இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளித்தார், அதன் பிறகு நட்டி சார் அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படத்தில் ஐந்து நாயகிகள் ஐந்து பேருக்கும் நல்ல கதாபாத்திரம் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர் , படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இது இருக்கும் நீங்கள் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் , நன்றி.