ஏமாலி படம் ஒரு புது முயற்சி! – இயக்குநர் துரை தகவல்

0
303

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு புது முயற்சி. சிம்பிளான ஒரு டீமை வச்சி இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம்.

சமுத்திரக்கனி இநத்ப் படத்துல ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு. அவர் இதுவரைக்கும் நடிச்ச படத்துல இருந்து இந்தப் படத்துல மாறுபட்ட கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு.சாம் ஜோன்ஸ், முதல் படத்துலயே நான்கு விதமான தோற்றத்துல நடிச்சிருக்காரு. ரொம்ப ஈடுபாட்டோட நடிச்சிருக்காரு.

இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில புது டீமை வச்சி பண்றது பெரிய விஷயம், அதை இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனம் லதா புரொடக்ஷன்ஸ் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்காரு. ரொம்ப பிரமாதமா எழுதியிருக்காரு. அவர்தான் என்னோட முந்தைய படமான ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்துக்கு வசனம் எழுதினாரு. இந்தப் படத்துல பெண் புகை பிடிக்கும் காட்சி இருக்கு. அது வேணும்னே வச்சது இல்லை, கதாபாத்திரத் தன்மைக்காக அத வச்சோம். நிறைய பேர் கேக்கறாங்க, அடுத்த படத்துல அது மாதிரி வராம பார்த்துக்கறேன்.” என்றார்