25
Jun
பாயும் ஒளி நீ எனக்கு திரை விமர்சனம் இயக்கம் - கார்த்திக் அத்வைத் நடிப்பு - விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா இசை-மஹதி ஸ்வர சாகர் ஒளிப்பதிவு - ஸ்ரீதர் நண்பருடன் இணைந்து நெட்வொர்க் தொடர்பான சிறிய நிறுவனம் நடத்தி வரும் கதாநாயகனுக்கு பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளது. இப்படியான நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யும் ரவுடிகளிடமிருந்து ஒரு பெண்ணை காக்கிறார். இதன் விளைவாக ரவுடிகள் கூட்டம் அவரை பழிவாங்க முற்படுகிறது. மறுபுறம் விக்ரம் பிரபு சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய கண் பார்வை பிரச்சினைக்கு மத்தியில் எதிரிகளை கண்டுபிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதி கதை விக்ரம் பிரபுவின் நடிப்பு இந்தப் படத்தை பெரிதும் தாங்கி நிற்கிறது .பார்வை குறைபாடால் அவதிப்படும் விக்ரம் பிரபு, சத்தத்தை வைத்து தன்னை தாக்க வருபவர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். வேல ராமமூர்த்தி, வாணி போஜன்…