22
Jul
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக 'கல்கி 2898 AD' என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா - ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் சொல்லிராத கதை சொல்லலில் இந்த திரைப்படம் தயாராகிறது. மேலும் இத்தகைய ஜானரில் அறிவியல் புனைவு கதை திரைப்படத்திற்கான எல்லையை விரிவாக்கம் செய்து புதிய வரையறையுடன் இப்படம் உருவாகிறது. 'கல்கி 2898 AD' ன் பிரம்மாண்டமான வெளியீடு, சான் டியாகோ காமிக்-கானில் நடைபெற்றது. அங்கு திரைப்படத்தின் காட்சிகள் அதன் தொலைநோக்கு கருத்து மற்றும் மயக்கும் காட்சி அமைப்புகள் மூலம் வருகை தந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. படத்தின் புதிய தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை துல்லியமாக உள்ளடக்கிய காணொளி.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்…