ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் ” த க வி”.
“ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் ” நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.” என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார் .சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரிக்கிறார்.
நான் கடவுள் ராஜேந்திரனுடன், சிங்கம் புலி , அஜய் ரத்தினம், வையாபுரி மற்றும் ராகவ் , ஜெய் போஸ் இருவரும் நாயகன்களாக நடிக்க இவர்களுடன் சாப்ளின் பாலு, பயில் வான் ரங்கநாதன், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவிலான், கிங்காங், விஜய பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சேலம், ஏற்காடு, . ஒடஞ்ச பாலம், விநாயகம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, உட்பட அதனை சுற்றி உள்ள இடங்களில் படம் வளர்ந்துள்ளது.
அரிகாந்த் கேமராவையும், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையையும், எம்.சக்திவேல் கதை, வசனத்தையும் , டாக்டர் .சி.சரவண பிரகாஷ் இணைத்தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.
எஸ். நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ்குமார் . ஜெ. திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
பின்னனி இசைச் சேர்ப்பு நடைபெற்று வரும் இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.