கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின்.
இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவின் – ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !January 15, 2022
காந்தி என்ற பெயரில் ‘நான் சிரித்தால்’ படத்தில் காமெடி ஹீரோவாக வரும் ஹிப் ஹாப் தமிழா!January 29, 2020
உலகம் சுற்றும் வாலிபன் !💥 ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!September 3, 2021
கிராமத்து கிரிக்கெட் பின்னணியிலான கதை 'திடல்'January 18, 2021
இயக்குநர் சி.வி ராஜேந்திரன் காலமானார்-April 1, 2018