தெய்வமச்சான் திரைவிமர்சனம்

தெய்வமச்சான் திரைவிமர்சனம்

  இயக்கம் - மார்டின் நிர்மல் குமார் நடிகர்கள் - விமல், அனிதா சம்பத், பால சரவணன். தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் செய்ய ஆசைப்படும் விமல் அதற்கு தடையாக வரும் பிரச்சனைகள் அதை தாண்டி அண்ணன் என்ன செய்கிறார். களவாணி போல் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். விமலை மீண்டும் கலகலப்பாக பார்ப்பது ஆசுவாசமாக இருக்கிறது. ஆண்பாவம்,களவாணி மாதிரியான கதைக்களம் கொண்ட படம். ஆனால் திரைக்கதையின் சோர்வில் பாதியே கலகலப்பாக இருக்கிறது. சின்ன சின்னதா அங்கங்கே சிரிப்பு, ஊடால் பழைய பாணி செண்டிமெண்ட் காட்சிகள், ஆனால் படத்தின் பலம் எங்கும் போரடிக்கவில்லை என்பதே. கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் சுந்தர் சி பாணி கலக்கலான காமெடி படமாக வந்திருக்கும். விமல் தன் தங்கச்சி அனிதா சம்பத்தை பெண் பார்க்க வந்த கிழட்டு பண்ணையார்களான நரேனையும் அவர் தம்பியையும் விரட்டி அடிக்கிறார் .கோவமான அவர்கள் அனிதாவுக்கு ஓகே வான மாப்பிள்ளையோடு கல்யாணம்…
Read More
கூர்மன்-  திரை விமர்சனம் !

கூர்மன்- திரை விமர்சனம் !

இயக்குநர் - பிரயன் B ஜார்ஜ் நடிகர்கள் - ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் தன் காதலி இறப்பினால் தனியே வசிக்கும் காவல் அதிகாரியிடம் ஒரு கேஸ் வருகிறது அதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பது தான் படம். மனதிற்குள் நினைப்பதை அறியும், மைண்ட் ரீடர் ஒருவன் தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில் குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம். உண்மையில் படம் ஆரம்பிக்கும் இடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத சினிமாவை பார்க்கும் உணர்வை தருகிறது. திரைக்கதையும் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ்…
Read More

தலைகீழாக நிற்க சொன்ன இயக்குநர் – கூர்மன் பட நாயகன் ராஜாஜி !

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. நடிகர் ராஜாஜி பேசியதாவது… நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment  தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது…
Read More