12
Apr
கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெனிமி. படம் வெற்றி என்பதைவிட இந்த படத்தில் வந்த ஓ போடு பாடல் மாபெரும் வெற்றிபெற்று பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிபெற்றுச்சு. எங்கு பார்த்தாலும் ஓ போடு, ஓ போடு என இந்த படத்தின் பாடல்தான் ஒலிச்சுது. கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான படம்தான் ஜெமினி. விக்ரம் படத்தில் நாயகனாக நடிச்சார். வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப் படம் உறுதி செய்தது. அதிலும் தேவர் ஃபிலிம்ஸ்…