திரை விமர்சனம் -N4

0
154

 

இயக்குனர் – லோகேஷ் குமார்
நடிகர்கள்- மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி,
இசை – ஜி. பாலசுப்பிரமணியம்
தயாரிப்பு – லோகேஷ் குமார் , நவீன் ஷர்மா

கதைசுருக்கம் :

மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நால்வரும் பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள். இவர்களை சிறுவயதிலேயே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். பின் இவர்கள் வளர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்போது கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருப்பார்
மேலும், அந்த பகுதியில் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றி இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் சந்திக்கும் நிலைமை ஏற்படுகிறது. அந்த சம்பவம் என்ன? அதனால் யார் யாருக்கு எந்தெந்த பிரச்சனைகள் ஏற்பட்டது? அதிலிருந்து தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அதே போல் கேப்ரில்லா, வினுஷா தேவி இந்த படத்தின் மூலம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது சிறப்பான ஒன்று. மேலும், படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சில கதாபாத்திரங்களும் அதில் நடித்து இருக்கும் இளைஞர்களும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

May be an image of 7 people, beard, wrist watch and text that says "1 DAY TOGO THEATRES FROM MARCH 24 YOUR EVERY ACTION HAS CONSEQUENCE N4 BY LOKESH KUMAR DHARMRAJ FILMS PRESENTS FILM"

இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் கதையை இயல்பாக காட்டி இருக்கிறது. படத்திற்கு பின்னணி செய்யும் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்திருக்கிறது. காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் மனிதர்களுடைய வாழ்வை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். எனினும் முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
இயக்குனர் சிறிது கதைக்களத்தில் கவனம் செலுத்திருக்கலாம் பார்ப்போருக்கு தொய்வை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம் .

மொத்தத்தில் N4 படம் சரியான பாதையில் செல்லாமல் நடு வழியில் நிற்கின்றது,