ஜான் விக் 4 விமர்சனம் !!

 

இயக்கம்: Chad Stahelski
நடிகர்கள்: Keanu Reeves, Donnie Yen, Bill Skarsgård, Laurence Fishburne, Hiroyuki Sanada, Shamier Anderson, Lance Reddick, Rina Sawayama, Scott Adkins, Clancy Brown, and Ian McShane
இசை: Tyler Bates/Joel J. Richard

உலகம் முழுக்க அதிரி புதிரி வெற்றியடைந்த
அடைந்த ஜான் விக் படத்தொடர் வரிசையில், அதன் நான்காம் பாகமாக வந்துள்ளது ‘ஜான் விக்: சேப்டர் 4’ .

ஜான் விக் படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்ககூடாது முழுக்க முழுக்க ஆக்சன் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு உலகை கட்டமைத்த படம் தான் ஜான் விக்.

உலகம் முழுக்க இருக்கும் கொலையாளிகள் உலகம் அவர்கள் தனி ராஜாங்கமும் ஜான் விக்கை கொல்ல அலைகிறது. அதிலிருந்து ஜான் விக் எப்படி மீள்கிறார், அவர் நினைக்கும் சுதந்திரம் அவருக்கு கிடைத்ததா என்பதெ கதை.

முதல் மூன்று பலங்களும் தொடர் ஆக்சன் ஆக்சன் ஆக்சன் ஆனால் இதில் படத்தின் பாதி வரை கதை சொல்கிறார்கள் என்னடா என நாம் நினைக்கும் நேரத்தில் ஆரம்பிக்கும் ஆக்சன் காட்சிகள் நம்மை சீட்டை விட்டே நகரவிடுவதில்லை.

விதவிதமான இடங்களில் விதவிதமான சண்டைக்காட்சிகள், ஒரே ஷாட்டில் டாப் ஆங்கிளில் வரும் ஒரு அன்கட் சண்டைக்காட்சி பிரமிப்பூட்டுகிறது. ஜான்விக்காக கெய்னூரீவ்ஸ் இதிலும் கலக்கியிருக்கிறார்.

துப்பாக்கி, கத்தி, பென்சில் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் முதல் மூன்று பாகங்களில் இருந்த வாவ் தருணங்கள் இதில் இல்லை. கண் தெரியாதவர் இஷ்டத்திற்கு சண்டை போடுவதும், ஜான்விக்கை ஒருவர் காப்பாற்றி கொண்டே இருப்பதும் ஒட்டவே இல்லை.

சண்டைக்காட்சிகளில் எல்லாம் எப்படி எடுத்தார்கள் என்கிற பிரமிப்பு நீங்கவே இல்லை. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கவனித்திருக்கலாம். எதிர்பாரா க்ளைமக்ஸ் ரசிகர்களுக்கு சோகம்…

 

May be an image of 2 people

ஜான் விக் ஆக்சன் பட விரும்பிகள் தவற விடக்கூடாத படம்.