இயக்குனர் ரகுமானின் படத்தை பார்த்த ரஜினிகாந்த்

இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளார். முன்னதாக ‘99 சாங்ஸ்’ படத்துக்கு கதை எழுதி இசையமைத்திருந்தார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாக ‘லே மஸ்க்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடும் இப்படம், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

லேமஸ்க் படத்தின் கதை என்ன?

ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘லீ மஸ்க்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். ரஜினிகாந்த் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி அணிந்து படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.