சூப்பர்ஸ்டார் மவுசு குறைந்தது, வசூலில் தடுமாறும் வேட்டையன் !!

சூப்பர்ஸ்டார் மவுசு குறைந்தது, வசூலில் தடுமாறும் வேட்டையன் !!

லைகா தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. சமூக அக்கறை மிக்க படைப்பு என பரவலாக பாராட்டைப் பெற்ற இப்படம் இன்று திங்கட்கிழமையான இன்று டிக்கெட் புக்கிங்கில் கடுமையாகச் சரிவைச் சந்தித்துள்ளது. முன்னதாக ஜெய்பீம் மூலம் பெரும் பாராட்டுக்களைக் குவித்த த செ ஞானவேல் சூப்பர்ஸ்டாரை இயக்கியுள்ளார் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது , மேலும் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ளது வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் இப்படம் வெளியானபோது விஜய்யின் கோட் படத்தை விட குறைவாகவே டிக்கெட் புக்காகி தடுமாறியது, ஆனால் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளும் ஃபுல்லானது. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் அதைத்தொடர்ந்து…
Read More
இயக்குனர் ரகுமானின் படத்தை பார்த்த ரஜினிகாந்த்

இயக்குனர் ரகுமானின் படத்தை பார்த்த ரஜினிகாந்த்

இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளார். முன்னதாக ‘99 சாங்ஸ்’ படத்துக்கு கதை எழுதி இசையமைத்திருந்தார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாக 'லே மஸ்க்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடும் இப்படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. லேமஸ்க் படத்தின் கதை என்ன? ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள…
Read More
ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை &  திரைக்கதை!

ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை & திரைக்கதை!

ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம். அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை. ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது! ஆம்.. 1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் "தில்லுமுல்லு'' படம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார். லதா தமிழிலும்,…
Read More
71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில் ரஜினிகாந்த் அற்புதமாகவே பரவச் செய்தார். ஸ்டைல் தனம் காட்டும் முன்பே அவரது கண்ணும் முகபாவங்களும் தாண்டவமாடிய படங்கள் பிரமிக்கத்தக்க வையாகவேகவே இருக்கும் அறிமுகப் படமான அபூர்வ ராகங்களில் புதிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் இரண்டாவது படமான கதா சங்கமம் (கன்னடம்) குங்கும ரக்சே ( கன்னடம்) சிலிக்கம்மா செப்பிண்டி (தெலுங்கு) போன்ற படங்கள் ரஜினிக்குள் இருந்த மகா கலைஞனை திரையில் முன்னிறுத்தின. எதற்காக சொல்கிறோம் என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண குமாரும் நிழல் நிஜமாகிறது கமலும் ரஜினி பிரதிபலித்த பாத்திரங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் பின்தங்கியே போனார்கள். புரியும்படி சொன்னால் கல்யாணகுமார் பாத்திரத்தைவிட ரஜினி சிறப்பாக செய்தார். தெலுங்கில் ரஜினி செய்த வேகத்திற்கு தமிழில் கமலால்…
Read More
‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை 'தரமணி' மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து 'தரமணி' படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.'' இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான…
Read More