27
May
'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆமிர் கான் படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். தனது குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இந்த பிரேக் தேவைப்படுகிறது என்று ஆமிர் கான் தெரிவித்திருந்தார். அதோடு நடிகர் சல்மான் கானை வைத்து 'சேம்பியன்ஸ்' என்ற படத்தைத் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார். பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான் ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் இடையே தற்போது நல்ல உறவு நீடித்து வருகிறது. சமீபத்தில் மூன்று பேரும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமிர் கான் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்கூடியவர். அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாருக்கானும், சல்மான் கானும் 'டைகர் 3' படப்பிடிப்பிலிருந்தனர். படப்பிடிப்பை முடித்துவிட்டே இருவரும் வந்திருக்கின்றனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும்…