இடியட் திரை விமர்சனம்

இயக்கம்ராம்பாலா

நடிகர்கள்சிவா, நிக்கி கல்ராணி,ஊர்வசி, ஜனகராஜ்

காமெடி ஹாரர் பேய் படம்

முன்னொரு காலத்தில் ஜமீனை ஏமாற்றி  இருவர் சொத்து சம்பாதிக்க அவரது வாரிசுகள் ஜமீன் இறந்து போய்பேயாய் இருக்கும் வீட்டுக்குள் போய் மாட்டிக்கொள்கிறார்கள் அவர்கள் தப்பித்தார்களா என்பது தான் படம்.

கதை என்னவன்று தனியாக நாம் கிளாஸ் படிக்க வேண்டும். அந்த அளவு இடியாப்பம் சுற்றுகிறார்கள்.  சமீபத்தியதமிழ் படங்களில் வெகு மோசமான படங்களின்  லிஸ்ட்டை அடைந்துள்ளது இடியட்

இடியட் என்பது படம் பார்க்கும் நம்மை சொல்வது போலவே இருக்கிறது. கொஞ்சமும் சிரிப்பில்லாதேதிரைக்கதை, நடிகர்களின் படு கேவலமான ரியாக்சன்கள்,  அமெச்சூரான மேக்கிங் என படத்தில் எதுவுமே  நன்றாக இல்லை.

சிவா இப்படத்தில் பைத்தியமாக வருகிறார் நமக்கு படம் பாதியிலேயே அந்த நிலை வந்து விடுகிறது. நிக்கிகல்ராணி டாக்டர், ஆனந்தராஜ், ஊர்வசி இன்னும் ஒரு கூட்டம் என ஆளாளுக்கு என்னவோ செய்து கொண்டுசுற்றுகிறார்கள் இத்தனை கூட்டமிருந்தும் மருந்துக்கூட சிரிப்பு வரவில்லை.

ஏனோ தானோவென எழுதப்பட்டு அதே வேகத்தில் படமாக்கப்பட்டது போல் இருக்கிறது படம். காமெடியும்இல்லை ஹாரரும் இல்லை. படம் எங்கே ஆரம்பிக்கிறது எங்கு செல்கிறது எதுவும் புரியவில்லை.

ஒளிப்பதிவு படத்தில் சொல்லிக்கொள்ளும் படி உள்ளது. மற்றபடி இடியட் பார்க்கப்போகிறவர்கள் தான்..