நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது!

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது.

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் அர்ஜுனன் கூறியதாவது.
இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் ஜாலியான ஒன்று. பேருந்து  காட்சிகளை எடுக்கும் போது, நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தோம், மிகுந்த சிக்கல்களுக்கிடையில் ஒரு செட்டில் வைத்து  ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ். குழந்தை நடிகர் ரித்விக் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி

நடிகர் ரிஷிகாந்த் கூறியதாவது…..
இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் பலருக்கு நன்றி கூற வேண்டும். நீங்கள் படத்தை பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். குட்டிபையன் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இயக்குனர் மற்றும் நடிகர் பரத் நீலகண்டன் கூறியதாவது..

இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் ஸ்டண்ட் இயக்குனர் தான். நான் இயக்குநராக அறிமுகமான பின் நடிகராக போய் நிற்பது புதுமையாக இருந்தது. நயன்தாரா முன் நான் நடித்தது வித்தியாசமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி. இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். படத்தின் செட் அமைப்பு அட்டகாசமாக இருந்தது. என்னுடன் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறியதாவது,,

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் தான் படத்தின் இசை சிறப்பாக வர காரணம். நயன்தாரா தான் படத்தின் ஆக்சிஜன். ரித்விக் மற்றும் பரத் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இந்த குழுவுடன் பணிபுரிவது பெருமையான விஷயம். இயக்குனர் சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளார். எடிட்டரின் பணியை பார்த்தபின் நான் அவரது ரசிகர் ஆகிவிட்டேன்.  படத்தின் சுவாரஸ்யதிற்கேற்ப இசையமைத்துள்ளோம். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் கூறியதாவது…
எங்களது குறும்படத்திற்கு கெஸ்ட் ஆக வரும் பிரபு சார் உடன் நாங்கள் இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். படத்தின் கதையை எனக்கு கூறிய போது, இது சவாலான ஒன்றாக இருக்கும் என எனக்கு தெரியும். அதற்கு பலர் உழைத்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடைய படங்கள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் எங்கள் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படப்பிடிப்பு சவாலான ஒன்று. நாங்கள் செய்யும் சோதனை முயற்சிகளுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நயன்தாரா அவர்களுக்கு நன்றி. மிகவும் ஈடுபாட்டுடன் இந்த திரைப்படம் எடுத்துள்ளோம். நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

குழந்தை நட்சத்திரம் ரித்விக் கூறியதாவது…
என் முதல் படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குனர் விக்னேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் தமிழ் அவர்களுக்கு நன்றி. நயன்தாரா மேடம் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

தயாரிப்பாளர் SR பிரபு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கூறியதாவது…
பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் இந்த கதையில் இருந்தது. படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குனர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாரா அவர்களும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் கதையை கேட்டபோதே கலை இயக்குனர் சதீஷ் தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்தோம். அவரும் நல்ல பணியை செய்து கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் இயக்குநர் நண்பர் என்பதற்காக பெரிய உழைப்பை போட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை ஒட்டி இசையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது. இந்த படம் ஓடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். நன்றி