08
Sep
தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர் கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய் விட்டார். அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே மனதைத் தேற்றிக் கொண்டனர் 90களின் இளைஞர்கள். அழகு, திறமை என்ன இரண்டும் சேர்ந்த சரியான கலவையோடு இருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது தற்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். 🎭 ”தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும், விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்குக் கிடைக்கும் அன்பு, வரவேற்பு, ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது என் இல்லத்துக்கே திரும்பியதைப் போல இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் அமலா… ✍️ தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள்.…