07
May
ஐங்கரன் திரைப்பட விமர்சனம் இயக்குநர் - ரவி அரசு நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், ஆடுகளம் நரேன், மஹிமா நம்பியார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க, ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞன், அவனை சுற்றி நிகழும் பிரச்சனைகள் இது தான் ஐங்கரன் கதை. எப்போதும் ஒரு ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் அதை சுற்றிய திரைக்கதையும் அதை சொல்லும் விதமும் தான் தமிழ் சினிமாவில் பிரச்சனையாக இருக்கிறது. நாயகனை சுற்றி கதை அமைக்க வேண்டிய அவசியமும் அதற்காக நாயகன் பல பராக்கிரம்ங்கள் புரிவதும் தான் பிரச்சனை. சமூகத்தில் நிகழும் பிரச்சனையை மையமாக வைத்து, அதனை சுற்றி அமைக்கபட்ட திரைக்கதை, படத்தின் மீதான் சுவராஸ்யத்தை கூட்டுகிறது. ஆனால் சுற்றி சுழன்றடிக்கும் திரைக்கதை இதில் பெரும் பிரச்சனையாகிறது உண்மையில் படம் இடைவேளைக்கு பிறகே ஆரம்பிக்கிறது நகைக்கடைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரி இளைஞனுக்கும் ஒரு பண்ணை அதிபருக்கும் இடையே நிகழும் மோதல், நேர்மையான…