ஜீனியர் NTR படத்துக்கு அனிருத் இசை

0
174

ஆச்சார்யா படத்தை இயக்கிய டோலிவுட்டின் பிரபல இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் தான் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக போகிறது.

இந்த படத்திற்கு கோலிவுட்டின் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். அவரது பின்னணி இசையில் உருவாகி உள்ள மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தீபிகா படுகோனே, ஆலியாபட் என முன்னனி நடிகைகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ஜீனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார், ஸ்ரீகர் பிரசாத் படதொகுப்பு, சாபு சிரில் என பலமான தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.