நேஷனல் ஜூனியர் சாம்பியன்களுடன் தேவயானி & விவேக் நடிக்கும் படம் – எழுமின்’

சமீபத்தில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின். ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிரபலங்கள் வெளியிட்ட “மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! க்ரைம் த்ரில்லர் அடிப்படையாக கொண்டு உரு...

September 11, 2023

அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் இயக்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

October 30, 2023

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார்!

June 12, 2019

இது என்னுடைய முதல் படம்! 'சித்தா' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்ச...

September 27, 2023

“பெரிய சந்தோசம் என்ன வென்றால்..?” - குணச்சித்திர நடிகர் சு.செந்தில்குமரன் பேட்டி

December 28, 2018

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் 'ஷார்ட் கட்' படத்திற்கு இரண்டு விருதுகள்..!

September 22, 2021